என் மலர்
இந்தியா

"உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது?" - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி
- னது உடம்பில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர் (குங்குமம்) ஓடுகிறது என்று மோடி பெருமையாக குறிப்பிட்டார்.
- நீங்கள் இந்தியாவின் கவுரவத்தை சமரசம் செய்துவிட்டீர்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பின்னணியில் பிரதமர் மோடி கருத்து ஒன்றை தெரிவித்தார்.
அதாவது, " பாரத மாதாவின் சேவகனான மோடி நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால் மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர் (குங்குமம்) தான் ஓடுகிறது" என்று அவரை அவரே பெருமையாக குறிப்பிட்டார்.
இதை விமர்சித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதவில், "மோடி ஜி, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள்.
எனக்கு பதில் சொல்லுங்கள்: 1. பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் ஏன் நம்பினீர்கள்? 2. டிரம்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? 3. கேமராக்களுக்கு முன்னால் மட்டும் ஏன் உங்கள் இரத்தம் கொதிக்கிறது? நீங்கள் இந்தியாவின் கவுரவத்தை சமரசம் செய்துவிட்டீர்கள். " என்று விமர்சித்துள்ளார்.






