search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    130 தொகுதிகளில் 20 இடங்களுக்கு மேல் பா.ஜ.க.வை வெற்றி பெற விடமாட்டோம்- காங்கிரஸ் முதல் மந்திரி
    X

    130 தொகுதிகளில் 20 இடங்களுக்கு மேல் பா.ஜ.க.வை வெற்றி பெற விடமாட்டோம்- காங்கிரஸ் முதல் மந்திரி

    • பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தென் மாநிலங்களின் நல்வாழ்வு வளர்ச்சிக்கு எதிராக உள்ளன.
    • வட மாநிலங்களில் 2019 தேர்தலில் பெற்ற வெற்றிகளை விட பா.ஜ.க.வின் எண்ணிக்கை குறையும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தென் மாநிலங்களின் நல்வாழ்வு வளர்ச்சிக்கு எதிராக உள்ளன. மோடியின் உத்தரவாதங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் பி. ஆர்.எஸ் வாக்குகளால் பா.ஜ.க. ஆதாயம் அடையலாம். ஆனால் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் 14 இடங்களையாவது கைப்பற்றும்.

    பா.ஜ.க. தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படி இல்லை.

    தென் மாநிலம் உட்பட அனைவரையும் உள்ளடக்கி உள்ளது. தென் மாநிலங்களில் உள்ள 130 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க.வை அதிகபட்சமாக 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற விடமாட்டோம். அதற்குள் அவர்களை கட்டுப்படுத்துவோம்.

    வட மாநிலங்களில் 2019 தேர்தலில் பெற்ற வெற்றிகளை விட பா.ஜ.க.வின் எண்ணிக்கை குறையும். ஒவ்வொரு மருந்துக்கும் காலாவதி தேதி உண்டு. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வி அடைவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×