ஸ்கை டைவிங் செய்து அசத்திய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் .. வைரலாகவும் வீடியோக்கள்

கஜேந்திர சிங் செகாவத் ஸ்கை டைவிங் செய்யும் வீடுயோ இணையத்தைக் கலக்கி வருகிறது.நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் பாஜக வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றவர் கஜேந்திர சிங் செகாவத்.
ஸ்கை டைவிங் செய்து அசத்திய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் .. வைரலாகவும் வீடியோக்கள்
Published on

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள பாஜக மூத்த தலைவர் கஜேந்திர சிங் செகாவத் ஸ்கை டைவிங் செய்யும் வீடுயோ இணையத்தைக் கலக்கி வருகிறது. இன்று [ஜூலை 13] உலக ஸ்கைடிவிங் தினம் [WORLD SKYDIVING DAY] கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதை ஊக்குவிக்கும் வகையில் 56 வயதான கஜேந்திர சிங் செகாவத் ஹரியானா மாநிலம் நார்நவுல் பகுதியில் நிபுணர் உதவியுடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

மிகவும் பயத்தை ஏற்படுத்தும் ஸ்கை டைவிங் ஸ்டன்டை மத்திய அமைச்சர் துணித்து செய்துள்ளதை நெட்டிஸின்கள் பாராட்டி வருகின்றனர். இந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் பாஜக வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றவர் கஜேந்திர சிங் செகாவத். பாஜகவின் கடந்த ஆட்சியில் [2019 முதல் 2024 வரை] ஜல் சக்தி அமைச்சராக கஜேந்திர சிங் செகாவத் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com