என் மலர்tooltip icon

    இந்தியா

    Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்

    • ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
    • இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட்.

    இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2017-ம் ஆண்டு இந்த தினத்தை பிப்ரவரி 1-ந் தேதி என மத்திய அரசு மாற்றியது.

    அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிற பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Live Updates

    • 1 Feb 2026 11:26 AM IST

      நாட்டின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக ரெயில் போக்குவரத்து திட்டத்தை அறிவித்தார் நிதியமைச்சர்

    • 1 Feb 2026 11:25 AM IST

      சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி உறுதி திட்டம். மூலதன செலவுக்கு ரூ. 12.2 லட்சம் கோடி ஒதுக்கீடு!

      -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 11:23 AM IST

      ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாட்டில் அரிய வகை தாதுக்கள் வழித்தடம் அமைக்கப்படும். கிராமங்களில் காதி, கைத்தொழிலை வளர்க்க, மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம். சிறுதொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்காக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

      -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 11:21 AM IST

      பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம். உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்!

      -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 11:18 AM IST

      உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்பட்டும் மருந்துகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. செமி கண்டக்டர் 2.0 திட்டத்திற்கு ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

      -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 11:16 AM IST

      தடைகளை தாண்டி சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். அனைவருக்குமான வளர்ச்சி, நிலையான பொருளாதாரம், மக்களின் விருப்பதை நிறைவேற்றுவது என மூன்று முக்கிய கடமைகளின் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது!

      -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 11:12 AM IST

      இளைஞர் சக்தியை முன்னிறுத்தி 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்து இருக்கிறோம்!

      -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 11:11 AM IST

      புனிதமான தைப்பூச நாளிலும் ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் நாட்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு 12 ஆண்டுகளில் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளது. தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம்!

      -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 11:09 AM IST

      இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது!

      - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    Next Story
    ×