என் மலர்
இந்தியா
Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்
- ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
- இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2017-ம் ஆண்டு இந்த தினத்தை பிப்ரவரி 1-ந் தேதி என மத்திய அரசு மாற்றியது.
அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிற பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Live Updates
- 1 Feb 2026 11:47 AM IST
3 தேசிய ஆயுர்வேதா மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்படும். பெண் கல்வியை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்காக விடுதிகள் அமைக்கப்படும். 15 ஆயிரம் இடைநிலை பள்ளிகளில் கற்பனை திறன் சார்ந்த பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு
- 1 Feb 2026 11:43 AM IST
AI, குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் அறிமுகப்படுத்த ஒருங்கிணைந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 1 Feb 2026 11:39 AM IST
நாட்டின் 5 முக்கிய இடங்களை மையமாக கொண்டு மருத்துவ சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை மருத்துவத்தை மேம்படுத்த, புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். கன்டெய்னர் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு
- 1 Feb 2026 11:35 AM IST
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மத்திய அரசு மீட்டிருக்கிறது. துணை மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும். வயது முதிர்ந்தோருக்கான மருத்துவ சேவை விரிவுப்படுத்தப்படும். வயது முதிர்ந்தோருக்கான மருத்துவ சேவைக்காக 1.5 லட்சம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 1 Feb 2026 11:31 AM IST
நகர் அடிப்படையிலான வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளில் ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. ஐதராபாத் - சென்னைக்கு, பெங்களூரு - சென்னைக்கு 7 அதிவேக ரெயில் வழித்தடம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு
- 1 Feb 2026 11:28 AM IST
புதிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். தேசிய நீர்வழி போக்குவரத்து வழித்தடம் ஒடிசாவில் ஏற்படுத்தப்படும். கடலோர சரக்கு போக்குவரத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 1 Feb 2026 11:26 AM IST
நாட்டின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக ரெயில் போக்குவரத்து திட்டத்தை அறிவித்தார் நிதியமைச்சர்
- 1 Feb 2026 11:25 AM IST
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி உறுதி திட்டம். மூலதன செலவுக்கு ரூ. 12.2 லட்சம் கோடி ஒதுக்கீடு!
-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்










