என் மலர்tooltip icon

    இந்தியா

    Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்

    • ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
    • இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட்.

    இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2017-ம் ஆண்டு இந்த தினத்தை பிப்ரவரி 1-ந் தேதி என மத்திய அரசு மாற்றியது.

    அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிற பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Live Updates

    • 1 Feb 2026 11:11 AM IST

      புனிதமான தைப்பூச நாளிலும் ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் நாட்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு 12 ஆண்டுகளில் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளது. தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம்!

      -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 11:09 AM IST

      இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது!

      - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 11:06 AM IST

      ஒரே பிரதமரின் கீழ் தொடர்ச்சியாக 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து புதிய சாதனை படைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 11:03 AM IST

      2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    • 1 Feb 2026 10:58 AM IST

      "கடந்த 11 ஆண்டுகளாக, எதிர்க்கட்சிகள் ஒரே ஒரு விஷயத்தைத்தான் கூறி வருகின்றன. இன்று, உலகில் மிக குறைந்த பணவீக்க விகிதம் இந்தியாவில் தான் உள்ளது. நமது பொருளாதாரம் உலகில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதுவே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகும். இன்று தனது சாதனை அளவிலான 9ஆவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்!"

      - பா.ஜ.க. எம்.பி. பைஜயந்த் பாண்டா

    • 1 Feb 2026 10:48 AM IST

      பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    • 1 Feb 2026 10:46 AM IST

      முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் X தள பதிவு


    • 1 Feb 2026 10:39 AM IST

      இது சீர்திருத்தங்களுக்கான பட்ஜெட் அல்ல, சீர்குலைவுக்கான பட்ஜெட், இந்த பட்ஜெட் நாட்டின் 5% மக்களுக்காக மட்டுமே. பாஜக தனது சொந்த ஆட்களை நிலைநிறுத்த மட்டுமே முயற்சிக்கிறது!

      - சமாஜ்வாதி எம்.பி. அகிலேஷ் யாதவ்

    • 1 Feb 2026 10:37 AM IST

      இந்திய பொருளாதாரத்தில் ஒரு தசாப்த காலமாக தீர்க்கப்படாத கட்டமைப்பு பிரச்சினைகள் உள்ளன, தனியார் மூலதன முதலீடு எதிர்பார்த்தபடி அதிகரிக்கவில்லை, அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளது, நிதியமைச்சர் இந்திய பொருளாதாரத்தில் உள்ள கட்டமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வுகளை உணர்ந்து, அவற்றை சரிசெய்வதற்கு தேவையான நேர்மையுடன் செயல்படுவார் என்று நம்புகிறேன்!

      - காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி

    • 1 Feb 2026 10:23 AM IST

      பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வர்த்தக நாள் என்று தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை அறிவித்துள்ளன

    Next Story
    ×