என் மலர்
இந்தியா
Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்
- ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
- இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2017-ம் ஆண்டு இந்த தினத்தை பிப்ரவரி 1-ந் தேதி என மத்திய அரசு மாற்றியது.
அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிற பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Live Updates
- 1 Feb 2026 10:15 AM IST
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பாராளுமன்றத்திற்கு புறப்படும் முன் தனது இல்லத்தில் மரக்கன்று நட்டார்
- 1 Feb 2026 10:11 AM IST
இன்று காலை 11 மணிக்கு 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
- 1 Feb 2026 10:07 AM IST
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்திற்கு வருகை
- 1 Feb 2026 10:03 AM IST
பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சரவை கூடி மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் நிகழ்விற்காக பிரமதர் மோடி வருகை
- 1 Feb 2026 9:59 AM IST
ஒரே பிரதமரின் கீழ் தொடர்ச்சியாக 9வது முறையாக நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிதியமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார் நிர்மலா சீதாராமன்
- 1 Feb 2026 9:42 AM IST
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதி மாளிகையில் திரவுபதி முர்முவை சந்தித்து நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.
- 1 Feb 2026 9:40 AM IST
டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் சந்திப்பு.
- 1 Feb 2026 9:40 AM IST
2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறப்பட்டார்.
- 1 Feb 2026 9:40 AM IST
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் சரிவு. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை வீழ்ச்சி.
- 1 Feb 2026 9:40 AM IST
மத்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது.











