என் மலர்tooltip icon

    இந்தியா

    Union Budget 2026: தன்னிறைவு பெற்ற இந்தியாவே இலக்கு- நிர்மலா சீதாராமன் பேச்சு
    X

    Union Budget 2026: தன்னிறைவு பெற்ற இந்தியாவே இலக்கு- நிர்மலா சீதாராமன் பேச்சு

    • இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது.
    • உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

    புதுடெல்லி:

    2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியவதாவது:-

    * புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் நாட்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன்.

    * பிரதமர் மோடி தலைமையிலான அரசு 12 ஆண்டுகளில் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளது.

    * தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம்.

    * பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது.

    * தடைகளைத் தாண்டி சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

    * பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம்.

    * இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது.

    * உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

    * வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் முன்னேற்றம் காணப்படும், தைரியமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றார்.

    Next Story
    ×