search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால்?- டெல்லி மந்திரி சொல்வது என்ன...
    X

    அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால்?- டெல்லி மந்திரி சொல்வது என்ன...

    • மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது
    • அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதேவேளையில், டெல்லி மாநில முதல்வராக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்போம் என்பதை வலியுறுத்தி ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி. இந்த கட்சியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஜாமின் பெற முடியாத நிலையில், ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    துணை முதல்வர் இருந்தவர் ஜெயிலில் உள்ளார். ஒருவேளை முதல்வரான கெஜ்ரிவாலும் ஜெயிலுக்கு சென்றால்? அரசை வழி நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி மாற்றுத்திட்டம் வைத்திருக்கும்.

    இதுதொடர்பாக டெல்லி மாநில மந்திரி சவுரப் பர்த்வாஜ்யிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில் "மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி கட்சியை தண்டிப்பதற்கான சதிச் செயலாகும்.

    ஒருவேளை அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் தற்போதைய நிலையில், மாற்று திட்டம் குறித்து எனக்கு ஏதும் தெரியாது. அதுபோன்று ஒரு ஆலோசனை நடைபெற்றதாக நான் நினைக்கவில்லை. கெஜ்ரிவால் எங்களுடைய தலைவர். அவருடைய உத்தரப்படி செயல்படுவோம்'' என்றார்.

    Next Story
    ×