என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் மீண்டும் காஷ்மீரை ஒரு சர்வதேச பிரச்சனையாக மாற்றியுள்ளது - முதல்வர் உமர் அப்துல்லா
    X

    பாகிஸ்தான் மீண்டும் காஷ்மீரை ஒரு சர்வதேச பிரச்சனையாக மாற்றியுள்ளது - முதல்வர் உமர் அப்துல்லா

    • பல ஆண்டுகளாக ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
    • இந்த நேரத்தில் காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருக்கும்.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இரு தரப்பு மோதல், அதைதொடர்ந்த்த உலக நாடுகளின் தலையீடு, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றை குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தேசிய ஊடகம் ஒன்றில் நேர்காணல் அளித்தார்.

    அதில் பேசிய அவர், "பஹல்காம் தாக்குதலால், பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பல ஆண்டுகளாக ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

    நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டு வந்த மாநில சுற்றுலாத் துறை மீண்டும் சரிந்துள்ளது. பாகிஸ்தான் மீண்டும் வேண்டுமென்றே காஷ்மீரை ஒரு சர்வதேச பிரச்சனையாக மாற்றியுள்ளது. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.

    ஆண்டின் இந்த நேரத்தில் காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருக்கும். வருமானம் ஈட்டக்கூடியதாக இருந்தது. இந்த நேரத்தில், குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்பினர். முன்பு ஒரு நாளைக்கு 50 முதல் 60 விமானங்கள் வந்து கொண்டிருந்தன.

    ஆனால் இப்போது எல்லாம் வெறிச்சோடியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மற்றும் வான்வெளி மூடப்பட்டுள்ளன" என்று வேதனை தெரிவித்தார்.

    Next Story
    ×