என் மலர்
இந்தியா

இரவு முழுக்க நடந்த தாக்குதல்: கண்விழித்து கண்காணித்த பிரதமர் மோடி
- பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலை இந்தியா முறியடித்ததை நொடிக்கு நொடி கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.
- அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து தகவல்களை பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் எல்லை மீறிய தாக்குதலுக்கு நள்ளிரவு முதல் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் கராச்சி, லாகூரை குறிவைத்து 25 டிரோன்களை கொண்டு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், இரவு முழுவதும் நடந்த தாக்குதல்களை கண் விழித்து நொடிக்கு நொடி பிரதமர் மோடி கண்காணித்தார்.
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலை இந்தியா முறியடித்ததை நொடிக்கு நொடி கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும், அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து தகவல்களை பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






