என் மலர்
இந்தியா

"மோடியைக் காணவில்லை.." பஹல்காம் தாக்குதல் பின்னணியில் காங்கிரஸ் பகிர்ந்த கேலிச் சித்திரம் நீக்கம்
- அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேரமில்லாமல், பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றார்.
- கேலிச் சித்திரத்துக்கு பாஜக தலைவர்கள் பலரிடமும் இருந்து கண்டனங்கள் வந்தன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடி மீது காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தேவைப்படும் நேரத்தில், 'கயாப்' (காணவில்லை) என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் பகிர்ந்த மோடியின் தலையில்லாத கேலிச் சித்திரம் வைரலாகியது.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமஷ் , சிறப்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாததை விமர்சித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேரமில்லாமல், பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றதாக அவர் விமர்சித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் பகிர்ந்த கேலிச் சித்திரத்துக்கு பாஜக தலைவர்கள் பலரிடமும் இருந்து கடுமையான கண்டனங்கள் வந்தன. பாஜக இந்த விவகாரத்தை பெரும் சர்ச்சையாக்கிய நிலையில் காங்கிரஸ் தனது பதிவை நீக்கியுள்ளது.
Next Story






