search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம்: ஆம் ஆத்மி அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம்: ஆம் ஆத்மி அறிவிப்பு

    • பாராளுமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இதில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி குறித்து ஆம் ஆத்மி எம்.பி சந்தீப் பதக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியுடன் சீட் பங்கீடு தொடர்பாக 2 அதிகாரப்பூர்வ சந்திப்புகளை நடத்தினோம். ஆனால் இந்த சந்திப்புகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

    இந்த 2 அதிகாரப்பூர்வ சந்திப்புகள் தவிர கடந்த 1 மாதத்தில் வேறு எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. அடுத்த சந்திப்புக்காக காத்திருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்களுக்கு கூட அடுத்த கூட்டம் பற்றி தெரியாது.

    இன்று கனத்த மனதுடன் இங்கு அமர்ந்திருக்கிறேன். அசாமில் இருந்து 3 வேட்பாளர்களை அறிவித்தோம். அவர்களை இந்தியா கூட்டணி ஏற்கும் என நம்புகிறேன்.

    காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் ஒரு இடம் கூட தகுதி இல்லை. ஆனால் கூட்டணி தர்மத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு டெல்லியில் ஒரு இடத்தை வழங்க நாங்கள் முன்மொழிந்துள்ளோம். காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி 6 இடங்களிலும் போட்டியிடுகிறது.

    கோவா மற்றும் குஜராத்தில் தலா ஒரு வேட்பாளரை அறிவித்துள்ளோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×