என் மலர்
இந்தியா

டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..
- டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படவுள்ளன.
Live Updates
- 8 Feb 2025 12:13 PM IST
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மகளிர் அணியின் தேசிய தலைவி அல்கா லம்பா தோல்வி முகம். அல்கா லம்பா வெறும் 2,328 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
- 8 Feb 2025 12:10 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. 46 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வெளியே தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 8 Feb 2025 12:05 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 38,415 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 7,918 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- 8 Feb 2025 11:58 AM IST
டெல்லி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தோல்வி முகம். ஷக்கூர் பஸ்தி தொகுதியில் போட்டியிட்ட ஜெயின் 15,754 வாக்குகள் பின்னடைவு.
- 8 Feb 2025 11:54 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 12 சுற்றுகளில் 6 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளது. கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி 3 ஆயிரத்து 231 வாக்குகள் பின்னடைந்துள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் ரமேஷ் பிதூரி 3,321 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
- 8 Feb 2025 11:47 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. 45 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 25 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
- 8 Feb 2025 11:44 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 36,880 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 7,508 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- 8 Feb 2025 11:35 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றியை அடுத்து பா.ஜ.க. தலைமை அலுவலகம் செல்கிறார் பிரதமர் மோடி.
















