'மனிதம் வெல்லவேண்டும்' - போர் குறித்து நடிகர் மம்மூட்டி கருத்து!

ஈரான் இஸ்ரேல் பிரதமர் அலுவகத்தை தாக்கியுள்ளது. இறுதியில் மனிதகுலம் வெல்லவேண்டும்.
'மனிதம் வெல்லவேண்டும்' - போர் குறித்து நடிகர் மம்மூட்டி கருத்து!
Published on

இயக்குநர் டி.வி. சந்திரன் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கௌரவிக்கும் விதமாக நேற்று கொச்சியில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு அதனை தொடங்கிவைத்து நடிகர் மம்மூட்டி உரையாற்றினார். அப்போது மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போர்குறித்து பேசிய அவர்,

"சினிமாவிலும் விவாதங்கள், போட்டிகள் மற்றும் 'போர்கள்' நடப்பதுண்டு; சில சமயம் ஒருவர் வெல்வார், சில சமயம் இரு தரப்பும் தோற்கும். இப்போதும்கூட வெளியே ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால், மனிதாபிமானம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என தெரிவித்தார். 

நடிகர் மம்மூட்டியின் இந்தக் கருத்து தற்போது கவனம் ஈர்த்துவருகிறது. ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துவரும் நிலையில் அவரின் இந்த கருத்து வந்துள்ளது. தற்போது ஈரான் இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கியுள்ளது. இதனால் போர் இன்னும் உச்சக்கட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கில் மேலும் பதட்டம் அதிகரித்து வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com