என் மலர்tooltip icon

    இந்தியா

    அது அவருடைய அனுமானம்: உத்தரவு தெளிவாக உள்ளது- கெஜ்ரிவால் விவகாரத்தில் ED-க்கு உச்சநீதிமன்றம் பதில்
    X

    அது அவருடைய அனுமானம்: உத்தரவு தெளிவாக உள்ளது- கெஜ்ரிவால் விவகாரத்தில் ED-க்கு உச்சநீதிமன்றம் பதில்

    • ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்காது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமானம்.
    • எங்களுடைய உத்தரவு (அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2-ந்தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்) மிகவும் தெளிவாக உள்ளது.

    இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது "நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள்.

    நான் மீண்டும் ஜூன் 2-ம்தேதி சிறைக்கு செல்ல வேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.

    கெஜ்ரிவால் இவ்வாறு பேசியிருப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். உச்ச நீதிமன்ற நிபந்தனைகளை மீறிவிட்டார். இதனால் இடைக்கால ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

    அமலாக்கத்துறையின் மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறுகையில் "ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்காது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமானம். அதைப்பற்றி நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. எங்களுடைய உத்தரவு (அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2-ந்தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்) மிகவும் தெளிவாக உள்ளது. இது நீதிமன்றம் உத்தரவு. நாங்கள் சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படுகிறோம்.

    எங்களுடைய முடிவு குறித்த விமர்சனத்தை வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் செல்லவில்லை. எங்களுடைய உத்தரவு தெளிவாக உள்ளது. நாங்கள் தேதி நிர்ணயித்துள்ளோம். இடைக்கால ஜாமின் வழங்கியதற்கான காரணத்தையும் கொடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×