என் மலர்
இந்தியா

இடிந்து விழுந்த கட்டிடம்.. பறந்து வந்த செங்கல் தாக்கியதில் சுருண்டு விழுந்த போலீஸ் - வீடியோ
- சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தை போலீஸ் அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்தனர்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தை போலீஸ் அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்தனர்.
கட்டிடம் இடிந்து விழும்போது அங்கிருந்து பறந்து வந்த கல் ஒன்று போலீஸ் அதிகாரியின் தலையில் மோதியதில் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவர் உயிர் பிழைத்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






