என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆதாரமின்றி காமென்வெல்த் ஊழல் வழக்கை மூடிய அமலாக்கத்துறை.. மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்
    X

    ஆதாரமின்றி காமென்வெல்த் ஊழல் வழக்கை மூடிய அமலாக்கத்துறை.. மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

    • முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விசாரணையின்போது கண்டறியப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அமலாக்கத் துறை தெரிவித்தது.
    • 2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.

    இந்தியாவில் 2010 இல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியல் களத்திலும் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 13 ஆண்டுகள் விசாரணை நடத்திய வந்தது

    இந்நிலையில் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் பண முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விசாரணையின்போது கண்டறியப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அமலாக்கத் துறை வழக்கை முடித்து வைக்கும்படி டெல்லி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

    இந்த அறிக்கையை ஏற்று நீதிபதி சஞ்சீவ் அகா்வால் நேற்று இந்த வழக்கை முடித்து வைத்தார். மேலும் சுரேஷ் கல்மாடி விடுதலை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காங்கிரசை இழிவுபடுத்த 2ஜி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற ஊழல்களைப் பிரதமர் மோடியும், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஜோடித்தனா்.

    2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.

    தற்போது காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டு வழக்கை முடித்து வைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

    இந்த விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தியதற்கு மோடியும், கேஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×