என் மலர்
இந்தியா

கேரளாவில் மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை - டாக்டர் உள்ளிட்ட 7 பேர் கைது
- அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித், அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
- கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவ மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த மருத்துவ மாணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டாக்டர் விக்னேஷ் தாதன், பிடிஎஸ் மாணவர் ஹலீனா, அசிம், அவினாஷ், அஜித், அன்சியா மற்றும் ஹரிஷ் என்பது தெரிய வந்துள்ளது.
அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித் மற்றும் அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சோதனையின்போது, சுமார் 4 கிராம் எம்.டி.எம்.ஏ, 1 கிராம் ஹைப்ரிட் கஞ்சா மற்றும் 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கார்கள், 2 பைக்குகள் மற்றும் 10 போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.






