என் மலர்
இந்தியா

'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான விவாதம்: பாராளுமன்றம் மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு
- ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் மதியம் தொடங்குகிறது
- மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் கடந்த வாரம் முழுவதும் அலுவல் எதையும் கவனிக்காமல் பாராளுமன்றம் முடங்கியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.
அதன்படி மக்களவையில் இன்றும், மாநிலங்களவை யில் நாளையும் (செவ்வாய்க் கிழமை) விவாதம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இரு அவைகளிலும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க் கள் இன்று காலையில் பாராளுமன்றத்துக்கு வந்தனர். காலை 10.30 மணியள வில் அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி னார்கள்.
அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர். மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், கனி மொழி, ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஆளும் கட்சியை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் காலை 11 மணியளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் சென்றனர். காலை 11 மணிக்கு பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது. பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் முதலில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சிங் சபையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.
அதே போல் பாராளுமன்ற மக்களவையிலும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் எதிரொலித்தது. இது தொடர்பாக விவாதம் நடத்த கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவின் இருக்கையை சூழ்ந்து கொண்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து மிகவும் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாராளுமன்றத்தின் மாண்பை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சீர்குலைக்கின்றனர். சபை செயல்படுவதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதிக்கவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றிக்கூட விவாதம் நடத்தக்கூட நீங்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என்று எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி சொல்ல வேண்டும்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆவணங்களை கிழிக்கி றார்கள், பதாகைகளை காண்பிக்கிறார்கள். கோஷம் எழுப்புகிறார்கள். அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயவு செய்து சபையின் கண்ணியத்தை பேண வேண்டும். பாராளுமன்றம் 140 கோடி மக்களின் பிரதிநிதித்துவ சபையாகும். அங்கு முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் எதிர்க் கட்சி எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார். பின்னர் சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
பின்னர் மதியம் 12 மணிக்கு மக்களவை மீண் டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மக்களவையை மதியம் 1 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.
பின்னர் மதியம் 1 மணிக்கு மீண்டும் மக்களவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் சபையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
அதே போல் பாராளுமன்ற மாநிலங்களவை மதியம் 12 மணிக்கு மீண்டும் கூடியது. இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மாநிலங்களவையை மதியம் 2 மணி வரை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சிங் ஒத்தி வைத்தார்.
முன்னதாக பாராளுமன்ற கூட்டம் தொடங்கும் முன்பு காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மந்திரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். அப்போது பாராளுமன்ற கூட் டத்தில் என்னென்ன விஷயங்களை பற்றி பேச வேண் டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தி முடிவு எடுத்தனர்.






