என் மலர்
இந்தியா

மீண்டும் பிரதமர் ஆகும் மோடி.. கொண்டாட்டத்தை தொடங்கிய தொண்டர்கள்
- பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் மோடியே 3-வது முறையாக ஆட்சியமைக்க தங்கள் ஆதரவை அளித்தனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடந்து முடித்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 இடங்களில் 240 தொகுதிகளை மட்டுமே பாஜக கட்சியால் கைப்பற்ற முடிந்தது. அதேநேரம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது.
பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் மோடியே 3-வது முறையாக ஆட்சியமைக்க தங்கள் ஆதரவை அளித்தனர். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.
இந்த பரபரப்பான சூழலில் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் பழைய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய ஜனநாயகக்கூட்டணியின் பாராளுமன்றக் குழு தலைவராக பிரதமர் மோடி இன்று தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
#WATCH | Delhi: BJP workers and supporters celebrate and burst crackers outside the Parliament after PM Modi was chosen as the leader of the NDA Parliamentary Committee today. pic.twitter.com/iZzBAp4RWI
— ANI (@ANI) June 7, 2024