என் மலர்
இந்தியா

என்னை அவமதித்த அதே இடத்திற்கு வந்து பாஜக அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்- மருத்துவர் ருத்ரேஷ்
- மக்கள் முன்னிலையில் டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை அமைச்சர் திட்டினார்.
- எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியது
கோவா மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரியை (CMO) பொதுமக்கள் முன்னிலையில் பாஜக அமைச்சர் விஸ்வஜித் அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவா மருத்துவக் கல்லூரியில் மக்கள் முன்னிலையில் டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை அமைச்சர் பகிரங்கமாக சத்தம் போட்டது வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோ வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்ததையடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியது. இதன் காரணமாக, அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், என்னை அவமதித்த அதே இடத்திற்கு வந்து அமைச்சர் ரானே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மருத்துவர் ருத்ரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய மருத்துவர் ருத்ரேஷ், "என்னை பொதுவெளியில் வைத்து அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ரானே, அதே இடத்திற்கு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்டூடியோவுக்குள் மன்னிப்பு வீடியோ எடுத்து வெளியிடுவதை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.






