search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டுவிட்டரில் டிரண்ட் - கர்நாடகாவில் போட்டியிட ராகுலுக்கு அழைப்பு
    X

    டுவிட்டரில் டிரண்ட் - கர்நாடகாவில் போட்டியிட ராகுலுக்கு அழைப்பு

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகாவில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் போட்டி போட்டுக்கொண்டு டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். #ParliamentElection #RahulGandhi
    பெங்களூரு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கர்நாடக மாநிலம் கலபுரகியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என்று கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதை வற்புறுத்தும் வகையில் கர்நாடக காங்கிரசில் இருந்து ‘ராகா ப்ரம் கர்நாடகா’ என்ற கோ‌ஷத்தை முன்வைத்து டுவிட்டரில் கருத்து தளம் உருவாக்கப்பட்டது.

    இதில் பலரும் சென்று தங்கள் கருத்துக்களை கூறினார்கள். அதில் ராகுல் காந்தி கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என்று ஏராளமானோர் அழைத்தனர். டுவிட்டரில் இந்த ஹேஸ்டாக் முன்னிலையில் இருந்தது.

    மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டனர். ராகுல்காந்தி கர்நாடகாவில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டரில் அடுத்தடுத்து 2 கருத்துக்களை வெளியிட்டார். அதில் முதல் கருத்தில் ராகுல்காந்தி கர்நாடகாவில் போட்டியிடுவதை பற்றி பரிசீலிக்க வேண்டும். தென்னிந்தியாவில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்களின் பிரதிநிதியாக பிரதமர் பதவிக்கு அவர் வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கண்டிப்பாக அவர் கர்நாடகாவை தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    2-வது கருத்து வெளியீட்டில் அமேதியில் போட்டியிடும் ராகுல்காந்தி கூடுதலாக கர்நாடகாவிலும் போட்டியிட வேண்டும். கர்நாடக மாநிலம் எப்பொழுதும் நேரு குடும்பத்திற்கு ஆதரவாக இருந்துள்ளது. இந்திராகாந்தி சிக்மளூரில் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். சோனியா காந்தி பெல்லாரி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். அதேபோல ராகுல்காந்தியும் இங்கிருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டமன்ற கட்சி தலைவருமான சித்தராமையாவும் கருத்து வெளியிட்டார். அதில், கர்நாடக மாநிலம் எப்போதும் காங்கிரஸ் தலைவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

    இந்திராகாந்தி, சோனியாகாந்தி ஆகியோர் தலைவர்களாக இருந்த காலத்தில் இதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அடுத்த பிரதமராக வர இருக்கும் ராகுல்காந்தியும், கர்நாடகாவில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

    துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா வெளியிட்டுள்ள கருத்தில் இரண்டு முக்கிய தலைவர்களான இந்திராகாந்தி, சோனியா காந்தி ஆகியோர் கர்நாடகாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றார்கள்.

    அதேபோன்ற நிலை உருவாக ராகுல்காந்தி இங்கு போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார். #ParliamentElection #RahulGandhi

    Next Story
    ×