search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் பெண்களை விட பசுக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன - சிவசேனா
    X

    இந்தியாவில் பெண்களை விட பசுக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன - சிவசேனா

    சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய உத்தவ் தாக்ரே, இந்தியாவில் பெண்களை விட பசுக்கள் பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
    மும்பை:

    பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பசுக்களை பாதுகாப்பதாக நடத்தப்படும் வன்முறையால் உயிர்கள் பலியாவது குறித்து பேசிய அவர், இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன, ஆனால் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பாஜகவின் இந்துத்துவா கொள்கை போலியானது என்றும், இந்தியாவில் இந்துத்துவா கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



    தொடர்ந்து பேசிய சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்ரே, நாங்கள் பசுக்களை பாதுகாக்க வேண்டாம் என கூறவில்லை எனவும், பசுக்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தியதால், பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் யார் தேச விரோதி என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது எனவும், மிகவும் எதிர்ப்பார்ப்புடன் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்ததாகவும், ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியைப் போலவே இப்போதும் ஆட்சி நடப்பதாகவும் உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டியுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
    Next Story
    ×