என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன் கி பாத்தில் பீகார் மனித சங்கிலிக்கு பாராட்டு: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நிதிஷ்குமார்
    X

    மன் கி பாத்தில் பீகார் மனித சங்கிலிக்கு பாராட்டு: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நிதிஷ்குமார்

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பீகார் மனித சங்கிலிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் நன்றி தெரிவித்தார். #NitishKumar #Modi #MannKiBaat
    பாட்னா:

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பீகார் மனித சங்கிலிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் நன்றி தெரிவித்தார்.

    பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் கடந்த 21-ம் தேதி மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. காந்தி மைதானத்தில் இருந்து அனைத்து வயதினருக்கும் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற 13,000 கி.மீ. மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.



    இதற்கிடையே, நேற்று நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பீகாரில் நடந்த மனித சங்கிலிக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர், சுய முன்னேற்றம், சுய திருத்தம் ஆகியவை இந்திய சமுதாயத்தின் முக்கிய அம்சங்களாகும். பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் போன்றவர்கள் ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கு நான் பாராட்டுகிறேன் என்றார்.

    இந்நிலையில், மன் கி பாத்தில் மனித சங்கிலியை பாராட்டி பேசிய பிரதமர் மோடிக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், வரதட்சணை, குழந்தை திருமணத்துக்கு எதிராக பாட்னாவில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினோம். மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்த மனித சங்கிலியை பாராட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #NitishKumar #Modi #MannKiBaat #tamilnews
    Next Story
    ×