என் மலர்

  செய்திகள்

  பாதுகாவலர்களை தவிர்த்துவிட்டு ராகுல் காந்தி 72 நாட்கள் மாயமானது ஏன்?: ராஜ்நாத் சிங் கேள்வி
  X

  பாதுகாவலர்களை தவிர்த்துவிட்டு ராகுல் காந்தி 72 நாட்கள் மாயமானது ஏன்?: ராஜ்நாத் சிங் கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கார் தாக்கப்பட்டது குறித்த இன்றைய விவாதத்தின் போது மக்களவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் நண்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
  புதுடெல்லி:

  குஜராத் மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் அங்கு சென்றார். அப்போது, அவரது கார் மீது சிலர் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அவர் சென்ற காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

  இந்த தாக்குதல் தொடர்பாக அம்மாநில பா.ஜ.க.வினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், மக்களவையில் இந்த விவாகாரத்தை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ”ராகுல் காந்தி போலீசார் மற்றும்  எஸ்.பி.ஜி பாதுகாப்பு பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றவில்லை. 72 நாட்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அவர் மாயமாகி இருந்தாரே? அது ஏன்” என சரமாரியாக கேள்விகளை அடுக்கினார்.

  தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க எம்.பி.க்களுக்கு இடையே தொடர்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிகழ்ந்தது. இதனால், அவையை நாள் முழுவதும் வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஒத்திவைத்தார்.

  முன்னதாக, ராகுல்காந்தி இரண்டு, மூன்று முறை தனது கட்சியினருக்கே தெரியாமல் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ரகசியமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது கூறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×