search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் தாக்குதல்"

    மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவின்போது ஏற்பட்ட வன்முறையின் போது மத்திய மந்திரி பாபுலால் சுப்ரியோ கார் நொறுக்கப்பட்டது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் கிழக்கு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி பாபுலால் சுப்ரியோ போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதிக்கு உட்பட்ட பாரபானி பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்குள்ள ஊழியர்களுடன் அவருக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, வெளியே நின்றிருந்த அவரது காரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

    இதுபற்றி மத்திய மந்திரி பாபுலால் சுப்ரியோ கூறுகையில், “வாக்காளர்களை ஓட்டுப்போட அனுமதிக்காமல் இருந்தனர். ஓட்டுப்போட அனுமதிக்குமாறு வலியுறுத்தியதற்கு என் கார் தாக்கப்பட்டது” என்றார்.

    பிர்பும் தொகுதியில் துப்ராஜ்புர் பகுதியில், செல்போன்களுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைய வாக்காளர்களுக்கு மத்திய படையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்களுடன் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
    ×