என் மலர்
செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை கண்டறிந்து உள்ளோம்: கேஎஸ் அழகிரி
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை கண்டறிந்து உள்ளோம், என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #Congress #KSAlagiri
சென்னை :
தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டத்துறை மாநில செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. சட்டத்துறை தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். இணைத்தலைவர்கள் எஸ்.கே.நவாஸ், அருணாசலம், மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய காங்கிரஸ் சட்டத்துறை தலைவர் விவேக் தன்ஹா, செயலாளர் விபுல் மகேஸ்வரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் நிறைவில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சட்டத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் களப்பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலிமையாகவே இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடக்கூடிய வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து இருக்கிறோம். தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு முழுமையடைந்ததும் அதனை தி.மு.க.விடம் சமர்ப்பிப்போம்.

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கடந்த ஓராண்டாக அவர் சிறையிலேயே உள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டை நியாயப்படுத்தவில்லை. இருந்தாலும் அவருக்கும் ஜாமீன் தருவதற்கு அரசு அச்சம் கொள்வது ஏன்? ஜாமீன் வழங்காதிருக்க என்ன காரணம்? என்பது தெரியவேண்டும். அரசும், முதல்-அமைச்சரும் பதில் அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சு.திருநாவுக்கரசர் பேசுகையில், “வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் கடுமையாக உழைத்து, ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலும் நமக்கு மிக முக்கியம். ஏனென்றால் அதன் முடிவானது தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சிக்கு வித்திடலாம். எனக்கு பதவி முக்கியமல்ல, கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் எனது 100 சதவீத ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும்”, என்றார்.

Next Story