என் மலர்
வேலூர்
வேலூர் கோட்டை பெரியார் பூங்காவிற்கு விரைவில் மறு ஏலம் வரும் என கலெக்டர் தகவல் தெறிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் கோட்டை அருகே உள்ள பெரியார் பூங்காவினை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்ததாரர் குத்தகையினை மேலும் நீட்டிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அதனை எதிர்த்து குத்தகைதாரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், கால நீட்டிப்பிற்கு மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன் ஆட்சேபனை தெரிவித்தார்.
தனி நீதிபதி உத்தரவினை செயல்படுத்தி வேலூர் கோட்டை பெரியார் பூங்கா குத்தகைதாரரை வெளியேற்ற அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெரியார் பூங்கா குத்தகைதாரரை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-
கோர்ட்டு உத்தரவுப்படி பெரியார் பூங்கா குத்தகைதாரரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரியார் பூங்காவிற்கு மறு ஏலம் நடத்தப்பட்டு குத்தகைக்கு விடப்பட உள்ளது. இதில் இப்போது இருந்த குத்தகைதாரர் கூட பங்கேற்கலாம் என்றார்.
வேலூர் ஜெயிலில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு கைதிகள் பரோலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் உள்ள கைதிகள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக முன்கூட்டியே கைதிகளிடம் விண்ணப்பம் பெறப்படும். கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் அவர்களுக்கு பண்டிகை கால பரோல் வழங்கப்படும்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பரோலில் செல்வதற்காக ஏராளமான கைதிகள் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கைதிகளை பரோலில் செல்ல சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் வேலூர் ஜெயிலில் கைதிகளிடம் பரோல் விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படவில்லை.
மேலும் வழக்கமாக ஜெயிலில் நடைபெறும் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு காலையில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வடை, கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 2,409 பயனாளிகளுக்கு ரூ.18 கோடி தாலிக்கு தங்கம் நிதி உதவியை கதிர் ஆனந்த் எம்.பி. வழங்கினார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
கதிர் ஆனந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2409 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், விதவை மறுமண நிதி உதவி, கலப்பு திருமண நிதி உதவி, பெண்கள் திருமண நிதி உதவி என மொத்தம் ரூ.18 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரம் நிதி வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில்:&
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மத்திய அரசு சார்பில் மகளிர் மேம்பாட்டு குழு செயல்படுத்தப்படுகிறது. அதில் நான் உறுப்பினராக இருக்கிறேன். தமிழகத்தில் செயல்படுத்தக் கூடிய தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து நான் தெரிவித்தேன்.
அதனை கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இதுபோன்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் நலனுக்காக மட்டுமே இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது கொரோனா, ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.இதில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் முதியோர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சமூக நல அலுவலர் முருகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை, திருப்பாற்கடல், ஆம்பூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
வேலூர்:
வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் உத்திர ரங்கநாதர் பெருமாள் சிம்மவாகனத்தில் எழுந்தருளி வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கொரோனா பரவலைத் தடுக்க கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் வைகுண்ட வாசல் திறப்பின்போது பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கணியம்பாடி ஒன்றியம், சிங்கிரிகோவில் கிராமத்தில் நாகநதி வடகரையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
அப்போது ஸ்ரீதேவி, பூதேவி, சமேத லட்சுமி நரசிம்மர் நாகாபரணத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் வேலப்பாடியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் ந அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு சாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறக் கப்பட்டது. அதன் வழியாக உற்சவர் வரதராஜபெருமாள் எழுந்தருளி சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேசபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் அண்ணாசாலையில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
மெயின் பஜாரில் உள்ள பெருமாள் கோவில், அரசமரப்பேட்டை லட்சுமி நாராயணபெருமாள் கோவில், கலாஸ்பாளையம் கோதண்டராமசாமி கோவில், தொரப்பாடி வெங்கடரமணசாமி கோவில், விருப்பாட்சிபுரம் பெருமாள் கோவில் உள்பட அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலை மீதுள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் நேற்று சிறப்புப் பூஜைகள் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் கோவிலில் சொர்கவாசல் திறக்கப்பட்டது.
எருது விடும் விழாவில் அசம்பாவிதம் ஏற்பட்டால் விழாக்குழுவினரே பொறுப்பு என்று வேலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 22 புதிய கட்டுப்பாடுகளுடன் விழாவை நடத்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அனுமதியளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எருது விடும் விழாவில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர், ஒரு உதவியாளர் என இருவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அல்லது 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.
இவர்களுக்கு மட்டுமே வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய முடியாது.
போட்டியில் பங்கேற்கும் காளைகளின் பதிவுகளை 3 நாட்களுக்கு முன்பே முடித்திருக்க வேண்டும். காளையின் உரிமையாளர், உடன் வரும் உதவியாளர் பெயரை பதிவு செய்ய வேண்டும். எருது விடும் விழா 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்படும்.
எருது விடும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வீரர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று அல்லது 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்று பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
விழா அரங்கிற்கு வெளியே பார்வையாளர்கள் 150 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். பார்வையாளர்களும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும். விழா நடத்த அரசின் முன் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
விழாக்குழுவினர் முன்னெச்சரிக்கை காப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் தொகையை மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் என்ற பெயரில் இந்தியன் வங்கியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விழாவுக்கான மொத்த நிகழ்ச்சியும் காப்பீடு செய்யப்பட்டு அதற்கான ஆவணத்தை வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும். ரூ.1 கோடிக்கான காப்பீடுத் தொகையாக ரூ.11,840&ம், எருதுகளுக்கு ரூ.75 ஆயிரத்துக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ.3,611 செலுத்த வேண்டும். எருது விடும் விழாவில் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு தலா ரூ.5 லட்சம், எருதுகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.
காப்பீடு குறித்த விவரங்களுக்கு 0416-226651 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
எருதுவிடும் விழா நிகழ்ச்சியின்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு தாங்களே முழு பொறுப்பு என்பதற்கான உத்தரவாத பத்திரத்தை விழாக்குழுவினர் வருவாய் கோட்டாட்சியர் வசம் சமர்ப்பிக்க வேண்டும்.
விழாவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். விழா நடைபெறும் பகுதியில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் திறந்தவெளி கிணறுகள் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து மூட வேண்டும்.
ரெயில்வே தண்டவாளங்கள், எரிவாயு கிடங்குகள், பெட்ரோல் பங்க், மின்மாற்றிகள், சாலைகளின் குறுக்கே செல்லும் வயர்கள் எதுவும் இல்லை என்பதை விழாக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.
விழா நிகழ்ச்சி முழுவதையும் சி.சி டிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். அரசால் அறிவிக்கப்படும் முழு ஊரடங்கு காலங்களில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி இல்லை.
வரும் 14&ந் தேதி முதல் 18-ந் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எருது விழாவை காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்குள் முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேலூரில் பா.ஜ.க. மனித சங்கிலி போராட்டம் செய்தனர்
வேலூர்:
வேலூர் காந்தி சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சி பிரசார பிரிவு, அமைப்புசாரா மற்றும் வணிகம், ஓ.பி.சி. பரிவு சார்பாக பஞ்சாப்பில் பாரத பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட காங்கிரஸ் அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் பிரசார பிரிவு மற்றும் ஓ.பி.சி. தலைவர்கள் செந்தில், சதிஷ், சினிவாசலு ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் தசரதன் ஆகியோர் கலந்து கொண்டார்.
இதில் வணிக பிரிவு மாநில செயலாளர் இளேங்கோ, மாவட்ட துணை தலைவர் ஜெகன்நாதன், பொதுசெயலாளர்கள் பாஸ்கர், பாபு. மாநில செயற்குழு உறுப்பினர் குட்டி, மாநகர் மண்டல தலைவர்கள், ஜெகன். தேவராஜ், முருகன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.கே.மோகன், ராஜேஷ், செல்வராஜ், மாநில அணி, பிரிவு, பொறுப்பாளர்கள் மாவட்ட அணி, பிரிவு பொறுப்பாளர்கள், நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சுமார் 100 பேர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கோவில் அர்ச்சகர்கள் ஊழியர்கள் 298 பேருக்கு சீருடையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
வேலூர்:
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பொங்கல் பண்டிகையை யொட்டி கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் செல்லியம்மன் கோவிலில் இன்று காலை நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா வரவேற்று பேசினார்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு வேலூர் மாவட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் 298 பேருக்கு இலவச சீருடைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, காட்பாடி, செயல் அலுவலர் செந்தில், வஜ்ஜிரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.செயல் அலுவலர் மாதவன் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று 423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 52,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,509 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,146 பேர் பலியானார்கள். தற்போது 1,747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 423 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 200&க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர். நேற்று 49 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று 264 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2 மடங்கு உயர்ந்து கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தற்போது பாதிப்பு ஏற்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை.
மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம்.முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுக் கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி (புதன்கிழமை) குடியரசு தினம் என்பதால் மதுக்கடைகள் மூடி வைக்க வேண்டும்.
அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் அன்றைய தினங்களில் மதுகூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் அது கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமைகளை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் மது கூட உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
திருவலம் அருகே வீடு புகுந்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் 7 வயது சிறுமி. இவரது பெற்றோர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர்.
இதனால் தனியாக இருந்த சிறுமி வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டினுள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் சிறுமி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த பாட்டி அங்கு வந்தார்.
இதையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து சிறுமியின் தாய் திருவலம் போலீசில் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் வழக்குப்பதிவு செய்து சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் 7 வயது சிறுமி. இவரது பெற்றோர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர்.
இதனால் தனியாக இருந்த சிறுமி வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டினுள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் சிறுமி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த பாட்டி அங்கு வந்தார்.
இதையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து சிறுமியின் தாய் திருவலம் போலீசில் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் வழக்குப்பதிவு செய்து சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற குதித்த தாய் மீது ரெயில் மோதியது. ரெயில் என்ஜினை உடனே டிரைவர் நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்தனர்.
காட்பாடி:
வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவரது மனைவி யுவராணி (வயது 37). இவர் 9 மாத ஆண் கைக்குழந்தையுடன் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டது.
அதைப் பார்த்து பதறிய யுவராணி தண்டவாளத்தில் குதித்து தனது குழந்தையை தூக்கிக்கொண்டு ஏறும்போது அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் யுவராணி மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயத்துடன் யுவராணி கீழே விழுந்தார். கைக்குழந்தையும் தண்டவாளத்தில் விழுந்தது. உடனடியாக ரெயில் டிரைவர் ரெயில் என்ஜினை நிறுத்தினார்.
அதைத் தொடர்ந்து காட்பாடி ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த தாய் மற்றும் கைக்குழந்தையை மீட்டனர்.
பின்னர் கைக்குழந்தையுடன் யுவராணியை வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ரெயில்வே தண்டவாளத்தில் கைக்குழந்தை மற்றும் தாய் சிக்கி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவரது மனைவி யுவராணி (வயது 37). இவர் 9 மாத ஆண் கைக்குழந்தையுடன் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டது.
அதைப் பார்த்து பதறிய யுவராணி தண்டவாளத்தில் குதித்து தனது குழந்தையை தூக்கிக்கொண்டு ஏறும்போது அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் யுவராணி மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயத்துடன் யுவராணி கீழே விழுந்தார். கைக்குழந்தையும் தண்டவாளத்தில் விழுந்தது. உடனடியாக ரெயில் டிரைவர் ரெயில் என்ஜினை நிறுத்தினார்.
அதைத் தொடர்ந்து காட்பாடி ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த தாய் மற்றும் கைக்குழந்தையை மீட்டனர்.
பின்னர் கைக்குழந்தையுடன் யுவராணியை வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ரெயில்வே தண்டவாளத்தில் கைக்குழந்தை மற்றும் தாய் சிக்கி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் விரிஞ்சிபுரத்தில் பாலாற்று வெள்ளத்தால் வீடுகளை இழந்த 24 பேருக்கு புதிய வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வேலூர்:
பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் காமராஜர் புரத்தில் பாலாற்றின் கரையில் கட்டப்பட்டிருந்த 24 வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தற்போது தங்கி உள்ளனர். இவர்களுக்கு விரிஞ்சிபுரம் அருகே உள்ள முடினாம் பட்டு கிராமத்தில் வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் ரூ.1.90 லட்சத்தில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
24 வீடுகளும் இன்னும் 3 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார். கலெக்டர் ஆய்வின் போது கே.வி.குப்பம் தாசில்தார் சரண்யா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






