என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் கோவில் அர்ச்சகர்கள் ஊழியர்கள் 298 பேருக்கு சீருடையை கலெக்டர் வழங்கினார்
கோவில் அர்ச்சகர்கள் ஊழியர்கள் 298 பேருக்கு சீருடை
வேலூர் மாவட்டத்தில் கோவில் அர்ச்சகர்கள் ஊழியர்கள் 298 பேருக்கு சீருடையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
வேலூர்:
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பொங்கல் பண்டிகையை யொட்டி கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் செல்லியம்மன் கோவிலில் இன்று காலை நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா வரவேற்று பேசினார்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு வேலூர் மாவட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் 298 பேருக்கு இலவச சீருடைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, காட்பாடி, செயல் அலுவலர் செந்தில், வஜ்ஜிரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.செயல் அலுவலர் மாதவன் நன்றி கூறினார்.
Next Story






