என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. பல இடங்களில் எந்திரம் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு கூட்டம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு அதற்கு பிறகு ஓட்டு போட அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று மாலை 3 பேர் மது குடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள வாக்குப்பதிவு எந்திரமும் பழுதானது. அதனால் 2.30 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.அதற்குப்பிறகு புதியதாக வாக்குப்பதிவு எந்திரம் கொண்டுவரப்பட்டது.
மாலை 5 மணிக்கு அங்கிருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
வேலூர் மாநகராட்சி 58-வது வார்டு அரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக வேட்பாளர் புகார் அளித்தனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் மாலை 5 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 4.50 மணிக்கு 100-க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்தனர்.அவர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் டோக்கன் வழங்கினார்.
அவர்களுக்கு மட்டும் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடியில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.






