என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியது
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம் பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஒடுகத்தூர் திருவலம் மற்றும் பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு வாக்குப்பதிவு நடந்தது.

    வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 2 வார்டுகளில் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

    இதனால் 58 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. மாநகராட்சியில் மட்டும் 354 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.

    வேலூர் மாநகராட்சி தேர்தலில்பதிவான அரசு வாக்குகள் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் நகராட்சியில் பதிவான வாக்குகள் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி யிலும், பேரணாம்பட்டு நகராட்சியில் பதிவான வாக்குகள் மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. 

    அதேபோல, ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் கான் வென்ட் பள்ளியிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் பள்ளி கொண்டா டிரங் ரோட்டில் உள்ள ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில் எண்ணிக்கை நடந்தது.

    வேலூர் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் அரசியல் கட்சி தலைமை ஏஜென்டுகள் முன்னிலையில் தபால் வாக்குப் பெட்டி திறக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு வார்டு வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது.

    அதற்கு பிறகு மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடந்தது.
    தபால் ஓட்டு மற்றும் எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் முழுமையாக எண்ணி முடித்த பிறகு ஒவ்வொரு வார்டின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

    வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 18 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்தது. தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கட்டிடத்தில் கீழ்த்தளத்தில் 1-வது, 2-வது மண்டலங்களுக்கும் மேல்தளத்தில் 3 மற்றும் 4-வது மண்டலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    15 மேஜைகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு வார்டு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப் பட்டன.

    மொத்தம் 140 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதுதவிர 200 அரசு ஊழியர்களும் மற்ற பணிகளில் ஈடுபட்டனர். ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    வேலூர் ஓட்டு எண்ணிக்கையை தொடர்ந்து ஒரே இடத்தில் குவிந்த அரசியல் கட்யினர் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலூர் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை நடந்தது.

    இதில் பங்கேற்கும் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் காலை 7 மணிக்கு முன்பாக வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏஜென்டுகள் பலர் காத மதமாக வந்தனர்.

    வாக்கு எண்ணும் மையத்தில் 100 மீட்டருக்கு முன்பாகவே தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏஜென்டுகள் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பிறகு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் அந்த இடத்தில் கடும் தள்ளுமுள்ளு நெரிசல் ஏற்பட்டது. மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இதன் மூலம் கொரோனா பரவும் நிலையும் ஏற்பட்டது.

    தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று மாநகராட்சி வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதனால் பாகாயத்திலிருந்து சி.எம்.சி. மருத்துவ கல்லூரி ஜெயில் வழியாக தொரப்பாடி பகுதிக்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. அனைத்து வாகனங்களும் ஆரணி சாலையில் திருப்பி விடப்பட்டன.

    பாகாயம் சந்திப்பு மற்றும் தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை திருப்பிவிட்டனர்.

    வேலூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதும் ஒலிபெருக்கி மூலம் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

    தி.மு.க மற்றும் அ.தி.மு.க., சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தந்தை பெரியார் பாலிடெக்னிக் அருகே குவிந்திருந்தனர். 

    அவர்கள் வெற்றி செய்தியை கேட்டதும் கைதட்டலுடன் பலத்த ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.இதனால் அந்த பகுதி இன்று பரபரப்பாக காணப்பட்டது.
    பேரணாம்பட்டு நகராட்சியை கைப்பற்றிய தி.மு.க. ஒரு வார்டில் கூட அ.தி.மு.க வெற்றி பெறவில்லை.
    வேலூர்:

    பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. பேரணாம்பட்டு அடுத்த கொண்டபல்லி கிராமத்தில் மரித் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் திமுக 16 இடங்களை கைப்பற்றியது.

    சுயேட்சை 4 வெற்றியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
    2006-ல் திமுக வெற்றி பெற்றிருந்தது. 2011இல் மீண்டும் வெற்றி பெற்றது திமுக. 10 வருடத்திற்கு பின்பு மீண்டும் திமுக வெற்றியை தன்வசம் படுத்தியுள்ளது.
    வேலூர் மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றுகிறது தி.மு.க.17, அ.தி.மு.க.4, பா.ம.க., சுயேட்சை 1 வார்டில் வெற்றி பெற்றனர்.
    வேலூர்

    வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    ஏற்கனவே மாநகராட்சி 7 மற்றும் 8-வது வார்டுகளில் தி.மு.க வேட்பாளர்கள் புஷ்பலதா வன்னிய ராஜா, சுனில் குமார் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

    இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டு மற்றும் மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் வருமாறு
    1-வது வார்டு அன்பு (தி.மு.க) வெற்றி 3,571
    அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெயக்குமார் 1,330
    2-வது வார்டு விமலா (தி.மு.க) வெற்றி 2086
    அ.தி.மு.க வேட்பாளர் குமார் 2014
    3-வது வார்டு ரவிக்குமார் (தி.மு.க) வெற்றி 2217
    இளங்கோ 1280 .
    4-வது வார்டு சித்ரா லோகு (தி.மு.க) வெற்றி.3045
      அ.தி.மு.க.கூட்டணி வேட்பாளர் மீனாட்சி 289
    5- வது வார்டு சித்ரா (தி.மு.க) வெற்றி 2,799
    கலைச்செல்வி 1358
    6-வது வார்டு சீனிவாசன் (சுயேட்சை) வெற்றி 2744.
    இந்த வார்டில் சம்பந்தம் தி.மு.க 2097, ஆனந்தன் அ.தி.மு.க 1043 வாக்குகள் பெற்றனர்.
    9-வது வார்டு சிவசங்கரி (தி.மு.க.) வெற்றி
    10-வது வார்டு ரமேஷ் (அ.தி.மு.க )வெற்றி
    11-வது வார்டு ரஜினி (தி.மு.க) வெற்றி
    12-வது வார்டு  டீட்டா சரவணன் (தி.மு.க) வெற்றி
    36-வது வார்டு  யூசுப் கான் (தி.மு.க.) வெற்றி 4615
    37- வது வார்டு திருநங்கை கங்கா (தி.மு.க) வெற்றி 2131
      மரியா 2116
    38-வது வார்டு திருப்பாவை (தி.மு.க) வெற்றி 3, 190
    உமா 1641
    39-வது வார்டு விஜயகுமார் (தி.மு.க) வெற்றி 2318
    பிரகாஷ் 1, 247
    44-வது வார்டு தவமணி (தி.மு.க) வெற்றி 2522
    பிரபாவதி 1143
    45 வயது வார்டு அஸ்மிதா (அ.தி.மு.க) வெற்றி 2371
    விஜயலட்சுமி 1867
    46- வயது வார்டு மாலதி (தி.மு.க.) வெற்றி 2327
    கலைச்செல்வி 1740
    47-வது வார்டு எழிலரசன் அ.தி.மு.க வெற்றி
    50-வது வார்டு அருணா விஜயகுமார் அ.தி.மு.க வெற்றி
    52 -வது வார்டு மகேந்திரன் தி.மு.க வெற்றி
    53-வது வார்டு பாபி கதிரவன் பா.ம.க வெற்றி.
    மதியம் 1 .15 மணி நிலவரப்படி வேலூர் மாநகராட்சியில் 23 வார்டு களுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டது. இதில் 17 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.க 4 ,பா.ம.க.,சுயட்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.
    மேலும் பல வார்டுகளில் திமுக முன்னிலையில் உள்ளது. இதனால் வேலூர் மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றுகிறது
    பள்ளிகொண்டா, பென்னாத்தூர் பேரூராட்சியில் தி.மு.க. வெற்றி பெற்றது.
    வேலூர்

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க 14 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க1, அ.ம.மு.க1, சுயேட்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றன.இதன் மூலம் பள்ளிகொண்டா பேரூராட்சி தி.மு.க கைப்பற்றியுள்ளது.

    பென்னாத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க 8 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ம.க 5, அதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
    குடியாத்தம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது அ.தி.மு.க. 10, பா.ஜ.க.1, சுயேட்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
    குடியாத்தம்:

    1வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆஜிராசலீம் வெற்றி
    2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்வர்பாஷா வெற்றி
    3வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நவீன்சங்கர் வெற்றி
    4வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட ஏகாம்பரம் வெற்றி
    5வது வார்டில்  திமுக சார்பில் போட்டியிட்ட கோவிந்தராஜ் வெற்றி
    குடியாத்தம் நகராட்சி
    6வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட முஷீராபேகம் வெற்றி
    7வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட கற்பகம்மூர்த்தி வெற்றி
    8வது வார்டில் திமுக சார்பில் 
    போட்டியிட்ட கவிதா பாபு வெற்றி
    9வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட  சௌந்தர்ராஜன்  வெற்றி
    10-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட சி.என். பாபு
    குடியாத்தம் நகராட்சி
    11வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சேர்மன் புவியரசி வெற்றி
    12 வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட  திமுக நகர பொறுப்பாளர் சௌந்தர்ராஜன் வெற்றி
    13 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக சார்பில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மேகநாதன் வெற்றி
    14வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட நளினி வெற்றி
     15வது வார்டு சார்பில் போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் விஜயன் வெற்றி
    குடியாத்தம் நகராட்சி
    16வது வார்டு  திமுக சார்பில் போட்டியிட்ட  சுமதி மகாலிங்கம் வெற்றி
    17வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட   குகன் வெற்றி
    18வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட   செல்விஅன்பு வெற்றி
    19வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட  இந்துமதி வெற்றி
     20வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட  திமுக வேட்பாளர்  ஜாவித் அகமது வெற்றி
    குடியாத்தம் நகராட்சி
    21 வது வார்டு  திமுக ரேணுகா வெற்றி
    22 வது வார்டு திமுக தேவகி வெற்றி
    23 வது வார்டில் மதிமுக சார்பில் போட்டியிட்ட ஆட்டோ மோகன் வெற்றி
    24 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட பூங்கொடி மூர்த்தி  வெற்றி
    25 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட தண்டபாணி வெற்றி
    26 வது வார்டு  திமுக கோபாலகிருஷ்ணன் வெற்றி
    27 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சிட்டிபாபு வெற்றி
    28 வது வார்டில் திமுக அரசு வெற்றி
    29 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட லாவண்யாகுமரன் வெற்றி
    30 வது வார்டு முஸ்லிம் லீக் ஹசினா வெற்றி
    31 வது வார்டு பிஜேபி சீதாலட்சுமி வெற்றி
    32 வது வார்டில் திமுக கல்லூரி மாணவி தீபிகா வெற்றி
    33 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட ரேவதி மோகன் வெற்றி
    34 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட ராணி பாஸ்கர் வெற்றி
    குடியாத்தம் நகராட்சி
    35 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கன்னிகா பரமேஸ்வரி வெற்றி
    36 வது வார்டு திமுக மனோஜ் வெற்றி
    குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளில் வெற்றி நிலவரம்
    திமுக கூட்டணி-23 
    அதிமுக-10
    பாஜக-1
    சுயேட்சை-2
    வேலூர் மாநகராட்சி 15 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னணிலையில் உள்ளது.

    37-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்கா 2131 வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மரியா 2116 வாக்குகள் பெற்றார். 15 ஓட்டு வித்தியாசத்தில் திருநங்கை கங்கா வெற்றியை பிடித்தார்.

    அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சான்றிதழை பெற்றுக் கொண்ட வேட்பாளர் கங்கா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வேட்பாளர் கங்காவை திருநங்கைகள் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
    அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சான்றிதழை பெற்றுக்கொண்ட வேட்பாளர் கங்கா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டன. இதில் 37-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்கா 2131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மரியா 2116 வாக்குகள் பெற்றார். 15 ஓட்டு வித்தியாசத்தில் திருநங்கை கங்கா வெற்றியை பிடித்தார்.

    அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சான்றிதழை பெற்றுக்கொண்ட வேட்பாளர் கங்கா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வேட்பாளர் கங்காவை திருநங்கைகள் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
    வேலூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாளை மதியம் 3 மணிக்குள் தெரிந்து விடும் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று நடந்தது.

    இதனை தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதற்கு பிறகு மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும்.

    தபால் ஓட்டு மற்றும் எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் முழுமையாக எண்ணி முடித்த பிறகு ஒவ்வொரு வார்டின் முடிவுகள் வெளியிடப்படும்.

    தபால் ஓட்டுகள் தலைமை ஏஜென்டுகள் முன்னிலையில் பிரித்து எண்ணப்படும். இதில் எந்தவித புகாரும் வராத வண்ணம் எண்ணிக்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 18 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக 15 மேஜைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்படும். 

    இதனால் நாளை மதியம் 3 மணிக்குள் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவர வாய்ப்பு உள்ளது.
    நகராட்சி பேரூராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2 மணி நேரத்திற்குள் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும்.

    மொத்தம் 140 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.இதுதவிர 200 அரசு ஊழியர்களும் மற்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒவ்வொரு வார்டு வாக்கு எண்ணிக்கையின் போது அந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

    அந்த வார்டு வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அவர்கள் அப்படியே வெளியேற்றப்படுவார்கள். அதற்கு பிறகு எண்ணப்படும் வார்டுகளின் வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் முக்கிய இடங்களில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

     பேட்டியின்போது தேர்தல் பார்வையாளர் பிரதாப் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மாநகராட்சி தேர்தல் பார்வையாளர் அஜய் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
    வேலூர்

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. முடிவுகளை ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள், உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. 

    மாநகராட்சி, நகராட்சிகளை காட்டிலும் பேரூராட்சிகளிலேயே அதிகப்படியான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், பதிவான வாக்குகள் நாளை (22-ந்தேதி) எண்ணப்படுகின்றன. 

    வேலூர் மாநகராட்சி தேர்தலில்பதிவான வாக்குகள் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் நகராட்சியில் பதிவான வாக்குகள் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பேரணாம்பட்டு நகராட்சியில் பதிவான வாக்குகள் மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. 

    அதேபோல, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் பள்ளிகொண்டா டிரங் ரோட்டில் உள்ள ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில் நாளை எண்ணப்பட உள்ளன.

    வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர், கழிப்பறை, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருவோர்களுக்கு தங்களுக்கான அனுமதி சீட்டை உடன் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அனுமதி சீட்டு இல்லாதவர்கள் எக்காரணத்தை கொண்டும் உள்ளே அனுமதிக்க முடியாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    புகார் மனுவை திரும்ப கேட்டு முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
    வேலூர்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அருகே உள்ள கே.வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 85). இவர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது.

    நான் எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் எனது 2 மகன்களுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுத்து விட்டேன். அதற்கு பிறகு அவர்கள் எங்களை கவனிக்கவில்லை.

    நானும் என் மனைவியும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்.

    எனது மகன்களுக்கு கொடுத்த பாகப்பிரிவினை சொத்தை ரத்து செய்யுமாறு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தேன்.

    இந்த மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அந்த புகார் மனுவை வைத்திருப்பது என்ன லாபம்.எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நான் கொடுத்த புகார் மனுவை என்னிடமே திரும்ப தாருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஏற்கனவே கொடுத்த மனுவை திருப்பி கேட்டு முதியவர் மீண்டும் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர் சாய்நாதபுரத்தில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரம் தனியார் பெண்கள் கல்லூரி பின்புறம் சாஸ்திரி நகர், கணபதி நகர், முருகன் நகர், கன்னிகாபுரம், செட்டியார்தோப்பு, வள்ளலார் நகர் போன்ற பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் தனியார் பெண்கள் கல்லூரியை ஒட்டி உள்ள சாலையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த சாலை சீரமைக்க படவில்லை.மேலும் சாலையை அடைத்து சுற்றுச் சுவர் கட்ட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சாய்நாதபுரத்தில் உள்ள ஆரணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காலை நேரம் என்பதால் அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் சாலையில் வந்தன. மறியல் போராட்டத்தால் இந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் அணிவகுத்து நின்றன.

    சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து வாகனங்கள் அனைத்தும் தொரப்பாடி சாலையில் திருப்பிவிடப்பட்டன.

    பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தற்போது மாநகராட்சி தேர்தல் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்த பிறகு அதிகாரிகள் மூலம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.இதனைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ×