என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தான் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் மனுவை திருப்பி கேட்ட முதியவர்
    X
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தான் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் மனுவை திருப்பி கேட்ட முதியவர்

    புகார் மனுவை திரும்ப கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு

    புகார் மனுவை திரும்ப கேட்டு முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
    வேலூர்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அருகே உள்ள கே.வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 85). இவர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது.

    நான் எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் எனது 2 மகன்களுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுத்து விட்டேன். அதற்கு பிறகு அவர்கள் எங்களை கவனிக்கவில்லை.

    நானும் என் மனைவியும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்.

    எனது மகன்களுக்கு கொடுத்த பாகப்பிரிவினை சொத்தை ரத்து செய்யுமாறு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தேன்.

    இந்த மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அந்த புகார் மனுவை வைத்திருப்பது என்ன லாபம்.எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நான் கொடுத்த புகார் மனுவை என்னிடமே திரும்ப தாருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஏற்கனவே கொடுத்த மனுவை திருப்பி கேட்டு முதியவர் மீண்டும் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×