என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி தேர்தலில் பதிவான தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட காட்சி.
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியது
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம் பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஒடுகத்தூர் திருவலம் மற்றும் பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு வாக்குப்பதிவு நடந்தது.
வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 2 வார்டுகளில் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் 58 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. மாநகராட்சியில் மட்டும் 354 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.
வேலூர் மாநகராட்சி தேர்தலில்பதிவான அரசு வாக்குகள் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் நகராட்சியில் பதிவான வாக்குகள் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி யிலும், பேரணாம்பட்டு நகராட்சியில் பதிவான வாக்குகள் மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்பட்டன.
அதேபோல, ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் கான் வென்ட் பள்ளியிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் பள்ளி கொண்டா டிரங் ரோட்டில் உள்ள ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில் எண்ணிக்கை நடந்தது.
வேலூர் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் அரசியல் கட்சி தலைமை ஏஜென்டுகள் முன்னிலையில் தபால் வாக்குப் பெட்டி திறக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு வார்டு வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது.
அதற்கு பிறகு மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடந்தது.
தபால் ஓட்டு மற்றும் எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் முழுமையாக எண்ணி முடித்த பிறகு ஒவ்வொரு வார்டின் முடிவுகள் வெளியிடப்பட்டன.
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 18 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்தது. தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கட்டிடத்தில் கீழ்த்தளத்தில் 1-வது, 2-வது மண்டலங்களுக்கும் மேல்தளத்தில் 3 மற்றும் 4-வது மண்டலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
15 மேஜைகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு வார்டு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப் பட்டன.
மொத்தம் 140 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதுதவிர 200 அரசு ஊழியர்களும் மற்ற பணிகளில் ஈடுபட்டனர். ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story






