என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேண்பாக்கத்தில் வாக்குச்சாவடி மையம் முன்பாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.
    X
    சேண்பாக்கத்தில் வாக்குச்சாவடி மையம் முன்பாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

    வேலூர் காகிதப்பட்டறை வாக்குச் சாவடிக்குள் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சுற்றியதால் வாக்குவாதம்

    வேலூர் காகிதப்பட்டறை வாக்குச் சாவடிக்குள் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சுற்றியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச் சாவடி அமைக் கப்பட்டு இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்ட இந்த மையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.

    மேலும் அரசியல் கட்சியினர் வாக்குச் சாவடிக்குள் உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தனர்.

    ஒரு வேட்பாளர் வாக்குச் சாவடியின் வாசலில் நின்றபடி வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

    வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் உள்ளே செல்வதை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மேலும் அரசியல் கட்சியினர் உள்ளே கட்சி கரை வேட்டியுடன் நிற்கின்றனர்.

    அவர்களை வெளியேற்றுங் கள் அதற்கு பிறகு நாங்கள் வெளி யேறுகிறோம் என்று ஆவேசமாக பதிலளித்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். 

    இதனையடுத்து வாக்கு சாவடி மையத்தில் இருந்தவர் களை வெளி யேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனாலும் முழுமையாக அவர்களை வெளியேற்ற முடியவில்லை. இதனால் அந்த வாக்குச் சாவடி பதட்டமாக காணப்பட்டது.
    Next Story
    ×