என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேலூர் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்த காட்சி.
    X
    குடியாத்தம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேலூர் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்த காட்சி.

    வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்சனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்சனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் குடியாத்தம் காந்திநகரில் உள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகிறது.
    இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று இரவு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தார். 

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம், வாக்குப்பெட்டிகள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள் இயக்கப்படும் அறை, வேட்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வழிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமமூர்த்தி, ரவிச்சந்திரன் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், சுவாதி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ஆய்வைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் மிகவும் சுமூகமாக நடைபெற்றது.

    அதேபோல் வாக்கு எண்ணிக்கையும் சுமூகமாக நடைபெற வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. 

    வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது இதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
     
    வேலூர் மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 350 போலீசாரும், குடியாத்தம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 200 போலீசாரும், பேர்ணாம்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 150 போலீசாரும், 

    பள்ளிகொண்டா வாக்கு எண்ணிக்கை மையத்தில் 150 போலீசாரும் மற்றும் 150 போலீசார் பிரச்சினைக்குரிய இடங்களில் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் நல்ல முறையில் சுமூகமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்சினைகளில் ஈடுபடுவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போது அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளருடன் ஒரு முகவர் மட்டுமே வர வேண்டும், செல்போன் அனுமதி இல்லை ஒரு சுற்று முடிந்தவுடன் அந்த சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் வெளியே சென்ற பின் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும், 

    அந்த சுற்றில் வரும் வார்டுகளின் வேட்பாளர்களும் அவர்களது முகவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் கண்டிப்பாக எக்காரணம் கொண்டும் செல்போன்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை வேட்பாளர் மற்றும் அவரது முகவர்கள் பேனா மற்றும் பேப்பர் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
    Next Story
    ×