search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குச்சாவடி மையத்தை எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.
    X
    வாக்குச்சாவடி மையத்தை எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.

    குடியாத்தத்தில் 2 இடங்களில் எந்திரங்கள் பழுது

    குடியாத்தத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவிற்கிடையில் 2 இடங்களில் எந்திரங்கள் பழுது ஏற்பட்டது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் நடைபெறும் தேர்தலுக்காக 91 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    மேலும் வாக்களிக்க வந்தவர்களுக்கு வெப்பமானி சோதனையும் கிருமி நாசினியும் வழங்கப்பட்டு அதன் பின்னரே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    குடியாத்தம் நகராட்சி 32வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையம் காமாட்சியம்மன் பேட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. 

    இங்கே வாக்கு பதிவு எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை இதனை அடுத்து புதிதாக அங்கு வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்பட்டது, இதேபோல் நகராட்சி 28 வார்டு வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. 

    அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை இதனையடுத்து உடனடியாக புதிதாக வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்பட்டது இதனால் 45 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    அதேபோல் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தும் பணி தாமதமாக நடைபெற்றதால் சில இடங்களில் 25 நிமிடம் வரை தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் நேற்று குடியாத்தத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். 

    இதேபோல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமையில் குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×