என் மலர்tooltip icon

    வேலூர்

    குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்களை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பெண், தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் ரோகினி (வயது 32). தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அவரது கணவர் சந்துருடன் வசித்து வருகிறார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திரா நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (43) என்பவருக்கு ரோகினி அவரது நண்பர் மூலம் அறிமுகமானார். சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் சீருடையில் உள்ள போட்டோ மற்றும் போலி அடையாள அட்டைகளை ரோகினி காண்பித்தார்.

    அப்போது தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிவதாகவும் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டு வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் போலீஸ் துறையில் குற்ற வழக்குகளில் சிக்கிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை குறைந்த விலையில் பெற்று தருவதாக தினேஷ் குமாரிடம் ஆசைவார்த்தை கூறினார்.

    இதனை நம்பிய தினேஷ்குமார் அந்த வாகனங்களை வாங்குவதற்கு முடிவு செய்தார்.

    இதுபற்றி ரோகினியை மீண்டும் தொடர்பு கொண்டார். அப்போது ரோகினி இன்னோவா காருக்கு ரூ.7 லட்சம் மற்றொரு காருக்கு ரூ.7 லட்சம் பணத்தை வங்கி கணக்கின் மூலமாக வழங்குமாறு கேட்டார்.அதன்படி தினேஷ்குமார் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

    இதனை தொடர்ந்து தினேஷ்குமார் சென்னையை சேர்ந்த அவரது நண்பர் செந்தில், வேலூரை சேர்ந்த குமார் ஆகியோரை ரோகிணிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களிடமும் போலீஸ் துறையில் உள்ள வாகனங்களை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டார்.

    ஆனால் அவர்களுக்கு எந்த வாகனமும் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை

    இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரோகிணியை தொடர்பு கொண்டபோது அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து தினேஷ் குமார் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 25-ந் தேதி புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த ரோகிணியை நேற்று போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் ரோகிணி ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் மட்டும் ரூ.24 லட்சம் மோசடி செய்துள்ளார்.

    கடந்த 2012-ம் ஆண்டு முதலே ரோகினி தான் போலீஸ் என கூறி சீருடையில் வலம்வந்து பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக 2012-ம் ஆண்டு வேலூர் பாகாயம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது 14 வழக்குகள் உள்ளன.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் செயின் திருடியதாக இவர் மீது வழக்கு ஒன்று உள்ளது.தமிழகம் முழுவதும் பல பேரிடம் பல லட்ச ரூபாய் அளவுக்கு மோசடியில் இவர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ரோகிணியின் மோசடி வேலைக்கு அவரது கணவர் சந்துரு உடந்தையாக இருந்துள்ளார். அவரது வங்கிக்கணக்கு மூலமாகத்தான் பல லட்சம் பணம் கைமாறி உள்ளது.

    இந்த தகவலை சேகரித்த போலீசார் ரோகிணி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கு சம்பந்தமாக ரோகிணியின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ரோகிணியிடம் ஏமாந்தவர்கள் இருந்தால் புகார்களை அளிக்கலாம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் உக்ரைனில் பேரணாம்பட்டு மாணவர் தவித்து வருகிறார்.
    பேரணாம்பட்டு

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து குண்டு மழை பொழிந்து வருகிறது. அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கொத்தூர் ஊராட்சி புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன் விவசாயி இவரது 2&வது மகன் சக்திவேல் இவர் உக்ரைன் நாட்டில் முஜைல் நகா¤ல்  உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில்   மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் சக்திவேல் தவித்து வருகிறார். 

    இவரது தாயார் சசிகலா (53) ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு  வந்த இவர் தனது மகன் உக்ரைன் நாட்டில் போர் நடத்தும் பகுதியில் சிக்கியிருப்பது கேள்விப்பட்டு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு திடீரென  மயங்கி விழுந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பா¤தாபமாக உயி£¤ழந்தார். சசிகலா இறந்த தகவல் அவரது மகன் சக்திவேலுக்கு வீடியோ கால் மூலம் தொ¤விக்கப்பட்டது. 

    இறந்த தாயின் முகத்தை  நோ¤ல் பார்க்க  முடியாமல்  இறுதி சடங்கு செய்ய   முடியாமல் வீடியோ காலில் பார்த்து கண்ணீருடன்  கதறி  அழுதார். இந்த சம்பவம் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    காட்பாடியில் வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    காட்பாடி குமரப்பா நகரை சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது 55). கூலித்தொழிலாளி.  இவர் நேற்று இரவு காட்பாடி ரெயில்வே மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்றார்.அப்போது ஆந்திரா நோக்கி வேகமாக சென்ற வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    தூக்கி வீசப்பட்ட பெஞ்சமின் படுகாயம் அடைந்தார். அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    காட்பாடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காட்பாடி போலீஸ் நிலையம் அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.

    விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பொய் வழக்குகள் போடும் திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    குடியாத்தத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வேலூர் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பிரேம்பாரத், தன்னார்வலர்கள் முத்துராஜ், தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மழை நீர் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்குவது, நாடகம் உள்ளிட்டவை நடத்திக் காண்பிக்கப்பட்டது.பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    டீன் ஏஜ் மாணவ-மாணவிகள் பெற்றோரை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று வேலூர் முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கல்வியில் முதன்மை பெறவேண்டும் என்பதற்காக மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பயிலரங்கம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை வரவேற்று பேசினார். ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் தொகுப்புரையாற்றினார். திருக்குறள் இயக்க தலைவர் கவிமாமணி அறிவுச்சுடர், கல்வி உலகம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு, பள்ளி துணை ஆய்வாளர் அ.மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி பேசியதாவது:-

    வேலூர் மாவட்ட மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். தாய் தந்தை ஆகிய இருவரும் 2 கண்கள். எனவே நீங்கள் அவர்கள் சொல்படி தான் நீங்கள் நடக்க வேண்டும்.

    தாய் என்பவள் போற்ற தகுந்தவள், நான் கஷ்டப்பட்டாலும் என் மகள், மகன் கஷ்டபடக்கூடாது என்று நினைத்து கொண்டு இருப்பாள். 

    நீங்கள் இப்போது டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய இளவயது மாணவிகளுக்கு நாம் செய்வது சரியா தவறா எனமுடிவெடுக்க முடியாது. இப்போது உங்களுக்கு தெரியாது. நீங்கள் உங்களது தாய் மற்றும் தந்தையர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

    நான் இன்று உங்கள் முன்னே மாவட்ட முதன்மைக்கல்வி அலுவராக நிற்கின்றேன் என்றால் அதற்கு எனது தாயாரும், தந்தையும் காரணம். எனது தந்தை கூறிய கருத்துக்களை கேட்டறிந்து அதன் வழி நடந்தன் விளைவு இன்று நான் அதிகாரி. உங்களது வாழ்க்கை சிறப்படைய ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள்.

    அனைத்து மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பயிற்சி அளிக்கின்றனர் இதனை உணர்ந்து சிறப்பாக கல்வி பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும்.தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகிய மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் மிக சிறந்த மாணவர்களாக முன்னேறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூரில் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வருவாய் கிராமங்கள் தோறும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி வேலூர் ஓட்டேரியில் உள்ள தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கழக அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 
     
    ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். நெல் உற்பத்தி செலவு உரம் இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி நடப்பு பருவத்தில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    வேலூர் பள்ளி மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த திருவள்ளூர் வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி.அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு இவரது போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணில் மாணவி தொடர்பு கொண்டார். அப்போது

    திருவள்ளூர் மாவட்டம் தரைச்சிஊத்துக்கோட்டை பழைய காலனியை சேர்ந்த மெக்கானிக் ஜான்ரோஸ் (வயது 19) என்பவர் பேசினார்.

    தவறுதலாக எண் பதிவு செய்ததால் மாணவிக்கு மிஸ்டு கால் வந்து விட்டதாக அவர் கூறினார். அதற்குப்பிறகு மாணவியிடம் அடிக்கடி போன் செய்து பேசத் தொடங்கினார். பலமுறை போனில் தொடர்பு கொண்டு காதல் வலை வீசினார்.

    இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டனர்.

    மேலும் ஜான்ரோஸ் வேலூருக்கு வந்து மாணவியை அடிக்கடி சந்தித்து விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாணவி வீட்டில் இருந்து வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அன்று வேலூருக்கு வந்த ஜான்ரோஸ் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றுவிட்டார். பள்ளிக்கு சென்ற மகள் வீடு திரும்பாததை கண்டு அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பள்ளியில் உடன் படித்த நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். எங்கும் காணவில்லை. இதனால் அழுது துடித்தனர்.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். முதலில் இந்த வழக்கில் துப்பு எதுவும் துலங்கவில்லை. மாணவியின் செல்போன் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் வாலிபர் ஜான் ரோஸ் என்பவர் மாணவியுடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஜான் ரோஸ் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

    அங்கிருந்த மாணவியை மீட்டு வந்தனர். போலீஸ் விசாரணையில் மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் ஜான்ரோசை போலீசார் கைது செய்தனர்.

    பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை பெற்றோர்கள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் படிக்கின்ற வயதில் மாணவிகள் தடமாறுவதை தவிர்க்க முடியும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
    30 ஏ.டி.எம். மையங்களில் ஒட்டும் பசையை தடவி நூதனமாக திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர், காட்பாடி, காந்திநகர், திருவலம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 30 ஏடிஎம் எந்திரங்களில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் இருந்த ஒட்டும் பசை காரணமாக பணம் எடுப்பவர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வந்தனர். மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒட்டும் பசையை தடவி செல்வது தெரியவந்தது.

    இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசாரிடம் வங்கி மேலாளர்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து மர்மநபர் ஏடிஎம் எந்திரங்களில் பசையை தடவும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே ஏ.டி.எம். மையங்களில் நுழைந்த வாலிபரை போல் பைக்கில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்தார். அவரை தனிப்பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில் பெங்களூர் ஒயிட் கார்டன் பகுதியை சேர்ந்த திம்மராயப்பா (37) என்பது தெரியவந்தது.

    மேலும் வெவ்வேறு இடங்களில் 30 ஏ.டி.எம். மையங்களில் ஒட்டும் பசையை தடவி நூதனமாக திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைதான வாலிபர் ஏடிஎம் எந்திரத்தில் வாடிக்கையாளர் இல்லாத நேரத்தில் ஏடிஎம் கார்டை நுழைக்கும் இடத்தில் பெவிகுவிக் பசையை தடவி விட்டு அங்கு அருகிலேயே உள்ள மற்றொரு ஏடிஎம் எந்திரத்தில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் நடித்துக் கொண்டிருப்பார்.

    அப்போது வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டை எந்திரத்தில் நுழைத்து பணம் எடுக்க ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்வதை அருகில் இருந்து பார்த்து கொள்வார். வாடிக்கையாளர் பணம் எடுத்த உடன் ஏடிஎம் கார்டு எடுக்க முயலும் போது கார்டு எந்திரத்தில் உள்ள பசை காரணமாக ஒட்டிக்கொள்ளும். கார்டை எடுக்க முடியாமல் வாடிக்கையாளர் வங்கியில் புகார் அளிக்க சென்றுவிடுவார்.

    இதை பயன்படுத்தும் மர்ம நபர் கம்பியின் மூலமாக ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு வேறொரு ஏடிஎம் மையத்துக்கு சென்று ரகசிய எண்ணை போட்டு பணத்தை எடுத்து செல்வார்.

    இவ்வாறாக 30 ஏடிஎம் மையங்களில் சுமார் 44 கார்டுகளை பயன்படுத்தி பல ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார். அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் பெங்களூரிலிருந்து வேலூருக்கு பைக்கில் வந்து வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் உக்ரைனில் தவித்து வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் காட்பாடி பிரமபுரத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகள் பவ்ய ஸ்ரீ உக்ரைன் நாட்டில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார். 

    தற்போது அங்கு போர் நிலவி வருவதால் அவரை மீட்டு தரும்படி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

    இதேபோல பேரணாம்பட்டை சேர்ந்த சையத் அக்யார் அகமது (20) என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அங்கு படித்து வருகிறார்.

    இதேபோல வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 மாணவிகள் உள்பட மொத்தம் 5 பேர் இதுவரை உக்ரைன் நாட்டில் தவிப்பது தெரியவந்துள்ளது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு மூலம் அவர்கள் குறித்த தகவல்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர்கள் இருக்கும் பகுதியில் அடிக்கடி குண்டுகள் வீசப்படும் சத்தம் கேட்கிறது. இதனால் அச்சத்துடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையிலிருந்து அவர்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

    விரைவில் அவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
    உக்ரைனில் சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் பேரணாம்பட்டு மாணவன், லத்தேரி மாணவி தவித்து வருகின்றனர்.
    பேரணாம்பட்டு:

    உக்ரைன் தலை நகரான கீவிற்கு கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரத்தில் அமைந்துள்ள வி.என். கராசின் கார்கிவ் நேஷனல் மருத்துவ பல்கலை கழகத்தில் பேரணாம்பட்டு டவுன் தாதாவீதியை சேர்ந்த சையத் அப்ரார் என்பவரின் மகன் சையத் அக்யார் அஹம்மத் என்பவர் 2ம் ஆண்டு மருத்துவ படித்து வருகிறார்.

    இவர் இந்தியாவை சேர்ந்த சக மாணவர்களுடன் குண்டு புகாத பாதுகாப்பான குடிலில் சிக்கி தவிப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து பேரணாம்பட்டு வருவாய் துறையினர் மருத்துவ மாணவர் அக்யார் அஹம்மது குறித்த விபரங்களை சேகரித்து வேலூர் கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மாணவன் அக்யார் அஹம்மதிடம் செல்போன் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசிய போது, பாதுகாப்பான பதுங்கும் இடத்தில் சக மாணவர்கள் 10 பேரு டன் தாம் தங்கியிருப்பதாகி இருக்கிறேன்.

    சுமார் 10 டிகிரி முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை கடும் பனி வாட்டுவதாகவும், இதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தான் தங்கியுள்ள இடத்தில் சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், குடிக்க சுகாதாரமான தண்ணீர் இல்லாததால் அங்குள்ள ஒரு குழாயில் உள்ள தண்ணீரை அருந்தி வருகிறோம்.

    மாலை 5.00 மணியளவில் (உக்ரைன் நாட்டு நேரப்படி) பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்ல முயன்ற போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் மிகவும் பயங்கரமாக கேட்டது. புகை மண்டலமாக காட்சியளித்தது. உயிருக்கு பயந்து கொண்டு பொருட்களை வாங்காமல் திரும்பி வந்து விட்டோம்.

    நாங்கள் தங்கியுள்ள பகுதியில் எந்த நேரத்திலும் குண்டு வெடிக்கலாம், சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள எங்களை பாதுகாப்பாக மீட்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    இதேபோல் வேலூர் மாவட்டம் லத்தேரி பள்ளத்தூரை சேர்ந்த அபிநயா (வயது 22) என்ற பெண்ணும் அங்கு சிக்கி உள்ளார்.

    பள்ளத்தூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கோமதி. இவர்களது ஒரே மகள் அபிநயா. இவர் உக்ரைன் நாட்டில் உள்ள வின்னிஸ்டா என்ற மாநிலத்தில் 5&ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது போர் நிலவுவதால் நாடு திரும்பமுடியாமல் தவித்து வருகிறார். 

    அவரை பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அபிநயா கூறியதாவது, தமிழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வின்னிஸ்டாவில் சிக்கி உள்ளனர். 

    எங்கள் பகுதியின் அருகில் உள்ள ஒரு நாட்டின் எல்லை மூடப்பட்டுள்ளது. எனவே எங்களை ருமேனியா நாடு வழியாக இந்தியா அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். எங்களுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    அதன்மூலம் ருமேனியா நாட்டுக்கு சென்று அங்கிருந்து இந்தியா திரும்ப உள்ளோம். தற்போது பாதுகாப்பாக உள்ளோம். விரைவில் தமிழகம் திரும்புவேன் என்றார்.

    அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
    உக்ரைனில் தவிக்கும் பேரணாம்பட்டு மாணவனின் தாய் திடீரென இறந்தார்.
    பேரணாம்பட்டு:

    ரஷ்யா, உக்ரைன் போர் தீவிரமாக நடந்து வருகிறது. தாக்குதலில் உக்ரைனில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

    தமிழக மாணவர்கள் ஏராளமானோர் உக்ரைனில் தவித்து வருகின்றனர்.

    பேரணாம்பட்டை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவரும் உக்ரைனில் தவித்து வருகிறார். மாணவர் சக்திவேல் அங்கு தவித்து வருவதை கேள்விப்பட்ட அவரது தாய் சசிகலா அதிர்ச்சியடைந்தார். சசிகலா ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

    இந்த நிலையில் அவர் திடீரென அதிர்ச்சியில் இறந்தார். மகன் உக்ரைனில் தவிப்பதை கேட்டு தாய்  இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×