என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரணாம்பட்டு மாணவர் அகயார் அஹமது, லத்தேரி மாணவி அபிநயா.
உக்ரைனில் சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் பேரணாம்பட்டு மாணவன், லத்தேரி மாணவி தவிப்பு
உக்ரைனில் சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் பேரணாம்பட்டு மாணவன், லத்தேரி மாணவி தவித்து வருகின்றனர்.
பேரணாம்பட்டு:
உக்ரைன் தலை நகரான கீவிற்கு கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரத்தில் அமைந்துள்ள வி.என். கராசின் கார்கிவ் நேஷனல் மருத்துவ பல்கலை கழகத்தில் பேரணாம்பட்டு டவுன் தாதாவீதியை சேர்ந்த சையத் அப்ரார் என்பவரின் மகன் சையத் அக்யார் அஹம்மத் என்பவர் 2ம் ஆண்டு மருத்துவ படித்து வருகிறார்.
இவர் இந்தியாவை சேர்ந்த சக மாணவர்களுடன் குண்டு புகாத பாதுகாப்பான குடிலில் சிக்கி தவிப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து பேரணாம்பட்டு வருவாய் துறையினர் மருத்துவ மாணவர் அக்யார் அஹம்மது குறித்த விபரங்களை சேகரித்து வேலூர் கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாணவன் அக்யார் அஹம்மதிடம் செல்போன் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசிய போது, பாதுகாப்பான பதுங்கும் இடத்தில் சக மாணவர்கள் 10 பேரு டன் தாம் தங்கியிருப்பதாகி இருக்கிறேன்.
சுமார் 10 டிகிரி முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை கடும் பனி வாட்டுவதாகவும், இதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தான் தங்கியுள்ள இடத்தில் சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், குடிக்க சுகாதாரமான தண்ணீர் இல்லாததால் அங்குள்ள ஒரு குழாயில் உள்ள தண்ணீரை அருந்தி வருகிறோம்.
மாலை 5.00 மணியளவில் (உக்ரைன் நாட்டு நேரப்படி) பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்ல முயன்ற போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் மிகவும் பயங்கரமாக கேட்டது. புகை மண்டலமாக காட்சியளித்தது. உயிருக்கு பயந்து கொண்டு பொருட்களை வாங்காமல் திரும்பி வந்து விட்டோம்.
நாங்கள் தங்கியுள்ள பகுதியில் எந்த நேரத்திலும் குண்டு வெடிக்கலாம், சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள எங்களை பாதுகாப்பாக மீட்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதேபோல் வேலூர் மாவட்டம் லத்தேரி பள்ளத்தூரை சேர்ந்த அபிநயா (வயது 22) என்ற பெண்ணும் அங்கு சிக்கி உள்ளார்.
பள்ளத்தூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கோமதி. இவர்களது ஒரே மகள் அபிநயா. இவர் உக்ரைன் நாட்டில் உள்ள வின்னிஸ்டா என்ற மாநிலத்தில் 5&ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது போர் நிலவுவதால் நாடு திரும்பமுடியாமல் தவித்து வருகிறார்.
அவரை பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அபிநயா கூறியதாவது, தமிழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வின்னிஸ்டாவில் சிக்கி உள்ளனர்.
எங்கள் பகுதியின் அருகில் உள்ள ஒரு நாட்டின் எல்லை மூடப்பட்டுள்ளது. எனவே எங்களை ருமேனியா நாடு வழியாக இந்தியா அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். எங்களுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம் ருமேனியா நாட்டுக்கு சென்று அங்கிருந்து இந்தியா திரும்ப உள்ளோம். தற்போது பாதுகாப்பாக உள்ளோம். விரைவில் தமிழகம் திரும்புவேன் என்றார்.
அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






