என் மலர்
திருவண்ணாமலை
- பெண்களின் தனித்துவத்தை எடுத்துரைத்து பேசினார்
- 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி கூட்ட அரங்கில் உலக பெண்கள் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை தாமரை செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நியாட் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ் டெக்னிக்கல் டிரைனிங்கின் நிர்வாக தலைவர் வினோத்குமார் கலந்து கொண்டு பெண்களின் தனித்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியைகள் மகேஷ்வரி, வசந்தா, தமிழரசி மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கொசு மருந்து அடிக்கப்பட்டது
- ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன
புதுப்பாளையம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் மருத்துவ வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கொசு பெருக்க த்தால் காய்ச்சல் பரவும் நிலை உள்ளதாக மாலைமலரில் செய்தி வெளியானது.
இந்த செய்தியின் எதிரொலியாக நேற்று முன்தினம் காரப்பட்டு மருந்து வட்டத்திற்குட்பட்ட அடிவாரம் வீராணங்கள் நந்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடித்து மருத்துவ முகாம் நடைபெற்றது.
நந்திமங்கலம், அடிவாரம், வீராணந்தல் கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுப்பாளையம் மருத்துவ வட்ட அலுவலர் அலுவலர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நந்திமங்கலம், அடிவாரம், வீராணந்தல் கிராமப் பகுதி முழுவதும் டெங்கு கொசு பெருக்கத்தை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நந்திமங்கலம் கிராம பகுதியில் டெங்கு, மலேரியா உள்பட காய்ச்சல்கள் பரவலை தடுக்க காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து க்கொண்ட நந்திமங்கலம் கிராம பகுதி பொதுமக்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விற்பனைக்காக வந்திருந்தது
- பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வாங்கி சென்றனர்
புதுப்பாளையம்:
செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் முழுக்க முழுக்க விவசாய பணிகளில் பொதுமக்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து கீரை வகைகள், தக்காளி, பீட்ரூட், முருங்கைக்காய், அவரை, பீர்கங்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை விவசாயி ஒருவர் தனது விளை நிலத்திலிருந்து விற்பனைக்காக நகருக்கு பீன்ஸ் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்திருந்த பீன்ஸ் சுமார் 2 அடிக்கு மேல் நீளம் இருந்தது.
சுமார் மூன்று கிலோ அளவிற்கு விவசாயி கொண்டு வந்திருந்த பீன்ஸ் ஒவ்வொன்றும் 2 அடி நீளம் இருந்தது. இந்த நீள மான பீன்சை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வாங்கி சென்றனர்.
- மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்துகொண்டர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் 2023-24-ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. மேலாண்மை நிலையத்தின முதல்வர் ரவிக்குமார் வரவேற்றார்.
சரக துணைப்பதிவாளர் மு.வசந்தலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் சித்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் பட்டயப் பயிற்சி வகுப்பினை தொடங்கிவைத்து பேசினார்.
பட்டயப் பயிற்சியின் முக்கியத்துவம், கூட்டுறவு சங்கங்களில் உள்ள வேலை வாய்ப்பு குறித்து விளக்கமளித்தார். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சியாளர்கள் இணைவழியில் நேரடியாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதில் கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவியாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர். முடிவில் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
- போலீசில் புகார் அளித்தார்
ஆரணி:
கண்ணமங்கலம் அடுத்த கீழ்வல்லத்தை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி சரசு (வயது 54). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இதனால் பத்திரிக்கை கொடுப்பதற்காக சரசு உறவினர்கள் ஞானம்மாள், இந்துமதி ஆகியோருடன் கடந்த 8-ந் தேதி ஆட்டோவில் ஆரணி அடுத்த லாடாவரத்திற்கு சென்றனர். அப்போது சங்கீத வாடி என்ற இடத்தில் வரும்போது எதிரே பைக்கில் வந்த மாதவன், அபாஸ் என்ற வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினர்.
அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆட்டோவை ஏன் மடக்கிறீர்கள் என்று சரசு மற்றும் உடன் இருந்த பெண்கள் வாலிபர்களிடம் கூறி உள்ளனர். இதனால் இரு தரப்பை சேர்ந்த வர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மாதவன் மற்றும் அபாஸ் 3 பெண்க ளையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகராறை விளக்கி விட்டு காயம் அடைந்த பெண்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சரசு ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாதவனை நேற்று இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலை மறைவான அபாசை தேடி வருகின்றனர்.
- பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்
- தாசில்தார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வந்தவாசி:
வந்தவாசியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
வந்தவாசி வட்ட வருவாய்த்துறை மற்றும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி ஆகியவை சார்பில் இந்த பேரணி நடந்தது.
தாசில்தார் பொன்னுசாமி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். தாசில்தார் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி பஜார் வீதி, தேரடி, காந்தி சாலை வழியாகச் சென்றது.
பேரணியில் பங்கேற்ற ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கல்லூரி மாணவிகள் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.
பேரணியில் துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் கல்லூரி பேராசிரியைகள் பங்கேற்றனர்.
- கம்பியால் குத்தி ஜல்லி மற்றும் தாரின் தரத்தினை பார்வையிட்டார்
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் மறு சீரமைப்பில் போடப்பட்ட சாலை பணிகளை உதவி கலெக்டர் ரிஷப் ஆய்வு செய்தார்.
புதிதாக போடப்பட்ட சாலையில் சிறிது தூரம் நடந்து சென்ற உதவி கலெக்டர் 3 இடங்களில் சுத்தி மற்றும் கம்பியால் குத்தி ஜல்லி மற்றும் தாரின் தரத்தினை பார்வையிட்டார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தலைமை செயற்பொறியாளர் ஆனந்தி, உதவி செயற் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
- புதைத்த 2 பேர் கைது
- வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கல்வாசல் கிராமம், கொல்லைமேடு பகுதியை ேசர்ந்தவர் சம்பத். தனது விவசாய நிலத்தை சுற்றி கம்பி அமைத்து திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்தார்.
இதில் அங்கு மேய்ச்சலுக்கு வந்த காட்டு மாடு ஒன்று சிக்கி மின்வேலியில் சிக்கி இறந்தது.இதை மறைத்து கேளூர் கிராமத்தைச் சார்ந்த ராஜ்கமல் என்பவர் மூலம் பொக்லைன் எந்திரம் கொண்டு மாட்டை புதைத்து விட்டார்.
இதுபற்றி தகவறிந்த வனத்துறையினர் புதைக்கப்பட்டிருந்த காட்டு மாடு உடலை தோண்டி எடுக்கப்பட்டு அரசு கால்நடை உதவி மருத்துவர், மூலம் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது.
மின்சாரம் தாக்கி இறந்த காட்டு மாட்டை புதைத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து் சம்பத், ராஜ்கமல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் குற்றத்துக்காக பயன்படுத்திய பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஒப்பந்ததாரர் போலீசில் புகார்
- கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
போளூர்:
போளூர் அடுத்த அலங்கார மங்கலம் ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள குப்பைகளை சேர்த்து பொதுவாக ஒரு இடத்தில் கொட்டுவதற்காக 15 -வது நிதி குழுவின் திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிக்கு அருகில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க ப்பட்டது.
அலங்காரம் மங்கலம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் திடக்கழிவு அமைக்கப்பட்ட இடத்தில் கொட்டுவது வழக்கம்.
அதே பகுதியை சேர்ந்த ஒருவர் குப்பைகளை இங்கே கொட்ட கூடாது, என்று தூய்மை பணியா ளர்களை தரைக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக வந்து கடப்பாரை, மண்வெட்டி யால் திடக்கழிவு மேலாண்மைக்காக அமைக்கப்பட்டிருந்த தொட்டியை அகற்றி உள்ளனர்.
இன்று காலையில் சேகரிக்கப்பட்ட குப்பை களை கொட்டு வதற்காக தூய்மை பணியாளர்கள் அந்தப் பகுதிக்கு சென்றனர்.
அப்போது திடக்கழிவு தொட்டிகளை இடித்து தள்ளப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ஒப்பந்த தாரர் முனுசாமி என்பவர் போளூர் போலீசில் புகார் அளித்தார். மேலும் பொதுமக்கள் திடக் கழிவு மேலாண்மையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
- 843 பேர் மனு அளித்தனர்
- உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.
கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை உள்ளிட்டவைகளை கேட்டு 843 பேர் மனு அளித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதேபோல் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் 78 மனுக்களும், ஆரணி சப் -கலெக்டர் அலுவலகத்தில் 79 மனுக்களும் பெறப்பட்டன.
இதில் வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கதவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 55). இவர் செய்யாறு பகுதியில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி அமுதா(46). இந்த நிலையில் வெங்கடேசன் வேலைக்காக செய்யாறுக்கு சென்று விட்டார். வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
காலையில் அமுதா எழுந்து வந்து பார்த்தார். அப்போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 14-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கான அண்ணா சைக்கிள் போட்டி வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
போட்டியில் 13 வயது முதல் 17 வயது உள்ளவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இதில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு பரிசாக தலா ரூ.1000 வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பிறப்பு சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் நகலுடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
போட்டி குறித்து கூடுதல் தகவல்களை பெற 04175 233169 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.






