என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    சேத்துப்பட்டில் லாரி மோதி ஐ.டி.ஐ. மாணவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள கொளக் கரவாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் சூர்யா (வயது 19).

     இவர் செய்யாறில்  உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்  ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார்.  சூர்யா நேற்று அதிகாலை தனது பைக்கில் கொளக்கரவாடி கிராமத்திலிருந்து சேத்துப்பட்டு வந்தவாசி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். 

    அப்போது எதிரே மதுரையிலிருந்து அலுமினிய சாமான்களை ஏற்றி வந்த லாரி திடீரென எதிர்பாராதவிதமாக சூர்யா ஓட்டி சென்ற பைக் மீது மோதியது.

    இதில் சூர்யா லாரியின் அடியில் சிக்கி கொண்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     மேலும் இதுகுறித்து சூர்யாவின் தந்தை வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம் பேரூராட்சி தேர்தல் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ம.க. வேட்பாளர் கடத்ததிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    செங்கம்:

    செங்கம் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டுகளிலும் பா.ஜ.க., மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி தலா 1 வார்டில் வெற்றி பெற்றன.

    பெரும்பான்மையை நிரூபிக்க தி.மு.க அ.தி.மு.க.  மோதும் நிலையில் உள்ளது.  18&வது வார்டு பா.ம.க. வேட்பாளர் அருள்ஜோதி வெற்றி பெற்றார். அவரை சிலர் கடத்தி சென்றனர். 

    இதை தொடர்ந்து பா.ம.க. வினர் வேட்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய போலீசாரை கண்டித்தும், கடத்திச் செல்லப்பட்ட வேட்பாளரை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என கூறி செங்கம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில் செங்கம் பெருமாள் கோவில் தெரு பகுதியில் வாக்கு மையத்திற்கு சற்று தொலைவில் பா.ம.க. வேட்பாளர் கடத்தபட்ட விவகாரத்தில் தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    இந்த தகவல் அறிந்த போலீஸ் சுப்பிரண்டு பவன்குமார்ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். 

    அந்த பகுதியில் கூடியிருந் தவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பா.ம.க. சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் அருள்ஜோதி பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு காரில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டார். 

    இதைதொடர்ந்து பா.ம.க.வினர் சாலை மறியலை கைவிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் உடன் சென்று தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனால் செங்கம் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
    வந்தவாசியில் 7 வார்டுகளில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர மன்ற உள்ளாட்சித் தேர்தல் 24 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் மையத்தில் முதல் சுற்றில் 8 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    அதன்படி வந்தவாசி நகராட்சி வெற்றி விவரம்:-

    1-வது வார்டு- அதிமுக, தீபாசெந்தில்
    2-வது வார்டு- சுயே, மூ.ஷீலா
    3-வது வார்டு- சுயே, அன்பரசு
    4-வது வார்டு- சுயே,பீபிஜான்
    5-வது வார்டு- சுயே, ஜொஹராபிவி
    6-வது வார்டு- சுயே, நூர் முகம்மது
    7-வது வார்டு- பாமக, ரதிகாந்தி
    8-வது வார்டு- திமுக ஹசீனா வெற்றி என அறிவிக்கப்பட்டது.

    வந்தவாசி நகர மன்ற தேர்தலில் போட்டியிட்டு 2-வது சுற்றில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்
     
    9-வது வார்டு-சுயே நாகூர் மீரான்
    10-வது வார்டு-திமுக ஜலால்
    11-வது வார்டு- முஸ்லீம் லீக் பர்வீன் பேகம்
    12-வது வார்டு-சுயே £¤ஹான
    13-வது வார்டு-திமுக சீனுவாசன்
    14-வது வார்டு-திமுக சுதா
    15-வது வார்டு- திமுக சரவணகுமார்
    16-வது வார்டு- திமுக நதியா வெற்றி பெற்றுள்ளனர்.
    ஆரணி நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது அ.தி.மு.க.15 வார்டுகளில் வெற்றி பெற்றது.
    ஆரணி

    ஆரணி நகராட்சியில் வாக்குகள்  இன்று எண்ணப்பட்டன. 

    1-வது வார்டு திமுக ஏசிமணி வெற்றி
    2-வது வார்டு அதிமுக தேவராஜ் வெற்றி
    3-வது வார்டு அதிமுக மோகன் வெற்றி
    4--வது வார்டு திமுக ஆர் எஸ் பாபு வெற்றி
    5-வது வார்டு அதிமுக சுதா குமார் வெற்றி
    6-வது வார்டு அதிமுக பானுப்பிரியா வெற்றி
    7-வது வார்டு அதிமுக ராமகிருஷ்ணன் வெற்றி
    8-வது வார்டு அதிமுக ரம்யா குமரன் வெற்றி
    9-வது வார்டு திமுக நஸ்ரியா பேகம் வெற்றி
    10--வது வார்டு திமுக நளினி பார்த்திபன் வெற்றி
    11-வது வார்டு அதிமுக விநாயகம் வெற்றி
    12-வது வார்டு அதிமுக பாக்கியலட்சுமி வெற்றி
    13-வது வார்டு அதிமுக பாரி பாபு வெற்றி
    14-வது வார்டு திமுக பழனி வெற்றி
    15-வது வார்டு திமுக ரவி வெற்றி
    16-வது வார்டு அதிமுக நடராஜன் வெற்றி
    17-வது வார்டு திமுக ரசீனாமாலிக் வெற்றி
    18--வது வார்டு திமுக சத்யா பாலசுந்தரம் வெற்றி

    முடிவில் தி.மு.க. 13, காங்கிரஸ்2, ம.தி.மு.க.2, சுயேட்சை1, அ.தி.மு.க. 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    தி.மு.க. கூட்டணி அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
    போளூரில் 8 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றனர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகள் இதில் 17. வார்டுகளுக்கு தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.

    இன்று போளூர் அருகே உள்ள எட்டி வாடி ஸ்ரீ ரேணுகாம்பாள் கலைக்கல்லூரியில் வாக்கு என்ன படுகின்றன. இதில் ஒரு வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தற்போது10.50 நிலவரப்படி போளூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுகவே முன்னணியில் உள்ளன.

    தற்போது மொத்த முள்ள வார்டுகளில் திமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதி உள்ள வார்டுகளில் திமுகவை முன்னணியில் உள்ளன.
    திருவண்ணாமலையில் 10.15 மணி வரை ஓட்டு எண்ணிக்கை தொடங்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி 39 வார்டுகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு  பெட்டிகள் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூ£¤ வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு இருந்தது. 

    தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8மணிமுதல் 10 மணி வரை நடைபெற்றதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் 10 மணிக்கு மேல்தான் திறக்கப்பட்டன. 
    இப்பணிகள் 10.20 மணி வரை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு கலெக்டர் முருகேஷ்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ஆகியோர் வருகை தந்து பார்வையிட்டனர்.

    ஆரணி நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 15 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
    ஆரணி:

    ஆரணி நகராட்சியில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

    1-வது வார்டு திமுக ஏசிமணி வெற்றி

    2-வது வார்டு அதிமுக தேவராஜ் வெற்றி

    3-வது வார்டு அதிமுக மோகன் வெற்றி

    4-வது வார்டு திமுக ஆர் எஸ் பாபு வெற்றி

    5-வது வார்டு அதிமுக சுதா குமார் வெற்றி

    6-வது வார்டு அதிமுக பானுப்பிரியா வெற்றி

    7-வது வார்டு அதிமுக ராமகிருஷ்ணன் வெற்றி

    8-வது வார்டு அதிமுக ரம்யா குமரன் வெற்றி

    9-வது வார்டு திமுக நஸ்ரியா பேகம் வெற்றி

    10-வது வார்டு திமுக நளினி பார்த்திபன் வெற்றி

    11-வது வார்டு அதிமுக விநாயகம் வெற்றி

    12-வது வார்டு அதிமுக பாக்கியலட்சுமி வெற்றி

    13-வது வார்டு அதிமுக பாரி பாபு வெற்றி

    14-வது வார்டு திமுக பழனி வெற்றி

    15-வது வார்டு திமுக ரவி வெற்றி

    16-வது வார்டு அதிமுக நடராஜன் வெற்றி

    17-வது வார்டு திமுக ரசீனாமாலிக் வெற்றி

    18-வது வார்டு திமுக சத்யா பாலசுந்தரம் வெற்றி

    முடிவில் தி.மு.க. 13, காங்கிரஸ் 2, ம.தி.மு.க. 2, சுயேட்சை 1, அ.தி.மு.க. 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    தி.மு.க. கூட்டணி அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

    வேட்டவலம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி உட்பட்ட 15-வார்டுகளில்பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

    இதில் தி.மு.க.வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும், அ.தி.மு.க.வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள்2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    அதிக வார்டுகளில் வெற்றி பெற்று வேட்டவலம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
    திருவண்ணாமலை நகராட்சியில் தபால் வாக்குகளில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் கடந்த 19-ந்தேதி  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து

    அனைத்து வாக்குச் சவடிகளிலும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

    பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது. 

    திருவண்ணாமலை 25-வது வார்டில் கள்ள ஓட்டு பதிவானதாகவும்,அங்கு மறுவாக்குப்பதிவு நடந்த வேண்டும் என்று தி.மு.க.உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி கலெக்டா¤டம் புகார் செய்தனர்.இதைத்தொடர்ந்து நேற்று 25-வது வார்டுக்கு மட்டும் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் எடுத்துச் செல்லப்பட்டன.
    இதைத்தொடர்ந்து இன்று காலை  8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    திருவண்ணாமலை நகராட்சிக்கு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூ£¤யிலும் ,
    ஆரணி நகராட்சிக்கு ஆரணி மார்க்கெட்டிலும் ,செய்யாறுநகராட்சிக்கு ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வந்தவாசி நகராட்சிக்கு வந்தவாசி அகிலாண்டேஸ்வா¤ கல்லூ£¤யிலும் வாக்குகள் எண்ணப்பட்டது. 

     செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிகளுக்கு செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ,கீழ்பென்னாத்தூர் மற்றும் வேட்டவலம் பேரூராட்சிகளுக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியிலும், கண்ணமங்கலம் ,போளூர், களம்பூர் பேரூராட்சிகளுக்கு ரேணுகாம்பாள் கலைக் கல்லூ£¤யிலும் சேத்துப்பட்டு, தேசூர் ,பெரணமல்லூர் பேரூராட்சிகளுக்கு சேத்துப்பட்டு தோமினிக் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்பட்டது.

    .வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார்  ஈடுபட்டனர்..வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி மற்றும் சுழலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டது. 

    திருவண்ணாமலை நகராட்சி வார்டுகளில் மொத்தம் 320 வாக்குகள் பதிவாகியிருந்தன இதில் அதிக வாக்குகள் பெற்று தி.மு.க.கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
    11-வது வார்டில் தி.மு.கவின் ரகுமான் கான் வெற்றி பெற்றனர். 12-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்தான லட்சுமி வெற்றி பெற்றார்.


    ஆரணி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 இடங்களுக்கு முடிவு அறிவிக்கப்பட்டதில் சுயேட்சைகளே அதிகம் வெற்றி பெற்றனர். சுயேட்சை வேட்பாளர்களான அருணா (1-வது வார்டு), கவுசல்யா (2-வது), பிரபாவதி (3-வது), சதீஷ் (4-வது), சுகன்யா (5-வது), சுபாஷினி (6-வது), ராஜேஷ்வரி (7-வது), முனுசாமி (8-வது), சுஜாதா (9-வது) ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 2-வது இடத்தில் வந்தன. 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கண்ணதாசன், 11-வது வார்டில் தி.மு.கவின் ரகுமான் கான் வெற்றி பெற்றனர். 12-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்தான லட்சுமி வெற்றி பெற்றார்.

    வந்தவாசி நகரமன்ற உள்ளாட்சித் தேர்தல் 24 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் மையத்தில் முதல் சுற்றில் 8 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரமன்ற உள்ளாட்சித் தேர்தல் 24 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் மையத்தில் முதல் சுற்றில் 8 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வந்தவாசி நகராட்சி வெற்றி விவரம்:-

    1-வது வார்டு- அதிமுக, தீபாசெந்தில்
    2-வது வார்டு- சுயே, மூ.ஷீலா
    3-வது வார்டு- சுயே, அன்பரசு
    4-வது வார்டு- சுயே,பீபிஜான்
    5-வது வார்டு- சுயே, ஜொஹராபிவி
    6-வது வார்டு- சுயே, நூர் முகம்மது
    7-வது வார்டு- பாமக, ரதிகாந்தி
    8-வது வார்டு- திமுக ஹசீனா வெற்றி என அறிவிக்கப்பட்டது.

    வந்தவாசி நகரமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2-வது சுற்றில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்
     
    9-வது வார்டு-சுயே நாகூர் மீரான்
    10-வது வார்டு-திமுக ஜலால்
    11-வது வார்டு- முஸ்லீம் லீக் பர்வீன் பேகம்
    12-வது வார்டு-சுயே ரிஹானா
    13-வது வார்டு-திமுக சீனுவாசன்
    14-வது வார்டு-திமுக சுதா
    15-வது வார்டு- திமுக சரவணகுமார்
    16-வது வார்டு- திமுக நதியா வெற்றி பெற்றுள்ளனர்.

    7 வார்டுகளை சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
    சேத்துப்பட்டில் விஷம் குடித்து டிரைவர் இறந்தார்.
    சேத்துப்பட்டு

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாகுல் முபாரக் (வயது 41) டிரைவர் இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    முபாரக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலன் அளிக்காமல் மனவேதனையில் இருந்து வந்தார்.

     நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சாகுல் முபாரக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் பிணத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ×