என் மலர்
உள்ளூர் செய்திகள்

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை நடந்த காட்சி.
திருவண்ணாமலையில் தபால் வாக்குகளில் தி.மு.க. முன்னிலை
திருவண்ணாமலை நகராட்சியில் தபால் வாக்குகளில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் கடந்த 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து
அனைத்து வாக்குச் சவடிகளிலும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலை 25-வது வார்டில் கள்ள ஓட்டு பதிவானதாகவும்,அங்கு மறுவாக்குப்பதிவு நடந்த வேண்டும் என்று தி.மு.க.உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி கலெக்டா¤டம் புகார் செய்தனர்.இதைத்தொடர்ந்து நேற்று 25-வது வார்டுக்கு மட்டும் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் எடுத்துச் செல்லப்பட்டன.
இதைத்தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
திருவண்ணாமலை நகராட்சிக்கு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூ£¤யிலும் ,
ஆரணி நகராட்சிக்கு ஆரணி மார்க்கெட்டிலும் ,செய்யாறுநகராட்சிக்கு ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வந்தவாசி நகராட்சிக்கு வந்தவாசி அகிலாண்டேஸ்வா¤ கல்லூ£¤யிலும் வாக்குகள் எண்ணப்பட்டது.
செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிகளுக்கு செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ,கீழ்பென்னாத்தூர் மற்றும் வேட்டவலம் பேரூராட்சிகளுக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியிலும், கண்ணமங்கலம் ,போளூர், களம்பூர் பேரூராட்சிகளுக்கு ரேணுகாம்பாள் கலைக் கல்லூ£¤யிலும் சேத்துப்பட்டு, தேசூர் ,பெரணமல்லூர் பேரூராட்சிகளுக்கு சேத்துப்பட்டு தோமினிக் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்பட்டது.
.வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட்டனர்..வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி மற்றும் சுழலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி வார்டுகளில் மொத்தம் 320 வாக்குகள் பதிவாகியிருந்தன இதில் அதிக வாக்குகள் பெற்று தி.மு.க.கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
Next Story






