என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவராக சுதா முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணா மலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் இன்றுகாலை நடந்தது இதில் சேத்துபட்டு பேரூராட்சியில் உள்ள 18 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

    இதில் சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வார்டுகள் திமுக 10 இடங்களிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் அதிமுக 2 இடங்களிலும் சுயேட்சைகள் 4 இடங்களில் பாமக 1 இடத்திலும் வெற்றி பெற்றன இதில் 3&வது வார்டு திமுக உறுப்பினர் எம்.சுதா முருகன் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யா ததால் போட்டியின்றி ஒருமனதாக சேத்துபட்டு பேரூராட்சி மன்றத் தலைவராக எம்.சுதா முருகன் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

     இவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திர பாபு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மணி, சூசை ஜெயராஜ், ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தது தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.
    சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 பேருக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசுடன் பசுமை சாம்பியன் விருதுக்கு 15&ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    2021-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1,00,00 வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.

    சுற்றுச்சுழல் கல்வி மற்றும் பயிற்சி சுற்றுச்சுழல் விழிப்புணர்வு, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள் பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு. 

    காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, போன்றவற்றில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல் படுத்திய நிறுவனங்கள். கல்வி நிறுவனங்கள், குடியிருப் போர் நலசங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற் சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தலைமையில் அமைக்கப் பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2 தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை தேர்வு செய்யும், இதற்கான விண்ணப்பம் படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் www.tnpsb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    உரிய ஆவணங்களுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட 2 விண்ணப்பங்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகடு (DVD) ஆகியவை உள்ளடக்கிய உறையின் மேல் பசுமை சாம்பியன் விருது என குறிப்பீட்டு கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப் பிக்கலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் திருவண்ணாமலை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். 

    மேலும் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 15.3,2022 என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    ஆரணி சூரியகுளத்தில் செத்து மிதந்த மீன்களால் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    ஆரணி:

    ஆரணி டவுன் மையப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சூரியகுளம்  உள்ளது. இந்த பகுதியின் நீர்பிடிப்பு ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த குளத்து தண்ணீரை பல ஆண்டுக்கு முன்பு குடிநீராக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் திருமலை சமுத்திர ஏரியிலிருந்து சுத்திகரிப்பு செய்த பின்னர் சூரியகுளத்திற்கு மழைநீர் வருவது வழக்கம்

    ஆனால் தற்போது சூரியகுளம் அருகில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளதால் கால்வாய்கள் அடைக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன. ரூ.6 கோடி மதிப்பீட்டில் சூரியகுளம் சீரமைக்கும் பணி நடைபெற்று பாதியளவில் பணிகள் முடங்கியது.

    கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையால் திருமலை சமுத்திர ஏரியிலிருந்து மழைநீர் சூரியகுளத்திற்கு வந்தன. இந்நிலையில் சூரியகுளத்தில் கழிவு நீர், கோழி இறைச்சிகள் ஆகியவற்றை கொட்டுவதால் சூரியகுளம் மாசுபட்டு குளத்தில் உள்ள ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கிறது. 

    செத்து மிதக்கும் மீன்களால் சூரியகுளத்தில் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சூரியகுளத்தை சீரமைக்க வேண்டும் என  பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ஆரணி நகராட்சியில் முதன் முறையாக இளைஞர் பட்டாளம் அதிகளவில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்குபட்ட 33வார்டுகளில் கடந்த மாதம் 19-ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்று 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க. 15 வார்டுகளிலும், ம.தி.மு.க., காங்கிரஸ் தலா 2 வார்டுகளிலும் சுயேட்சை 1 வார்டுகளில் உள்ளிட்ட 33வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

    மேலும் நேற்று ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது.
    இதில் 33வார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

    ஆரணி நகராட்சியில் முதல் முறையாக 30 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் இளைஞர்கள் 10 பேர் பதவி ஏற்று கொண்டனர்.

    இதில் தி.மு.க.வை சேர்ந்த 20-வது வார்டு 21 வயது இளம் பட்ட படிப்பு படித்து கொண்டிருக்கும் ரேவதி, 9-வார்டு இஷ்ரத் ஜபின், (22) என்ற இளம்பெண் அ.தி.மு.க.வை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் சுதா என்ற இளம்பெண், 6-வது வார்டு பானுப்பிரியா, 29-வது வார்டு சசிகலா, 31-வது வார்டு கிருபா சமுத்திரி ஆகிய இளம் பெண்கள் பதவி ஏற்று கொண்டனர்.

    அதே போல தி.மு.க.வை சேர்ந்த 4-வது வார்டு உறுப்பினர் ஆர்.எஸ்.பாபு 23-வது வார்டு உறுப்பினர் அரவிந்த், 30-வது வார்டு உறுப்பினர் கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட இளம் பெண்கள் இளைஞர்கள் உள்ளிட்ட 10 பேர் வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ளனர். 

    மேலும் ஆரணி நகர மன்ற வரலாற்றில் முதன்முறையாக இளம்பெண்கள் இளைஞர்கள் பட்டதாரிகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் ரமணா பள்ளி &அருணை நகர் இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.45 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் ஆடையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9.07 லட்சம்மதிப்பீட்டில் நடைபெறும் உறிஞ்சிக்குட்டை அமைக்கும் பணியினையையும் மற்றும் மேலதிக்கான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.83 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற நூலக கட்டிடம் மறு சீரமைப்பு பணியினையும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சிக்குழி அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து உடையானந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கலெக்டர் பா.முருகேஷ் மரக்கன்று நட்டார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    ஆரணியில் நண்பனின் மனைவியை கூட்டுப்பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி. இவரது மனைவி (வயது 26), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

    அந்த இளம்பெண் ஆரணியில் உள்ள வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்று வரும்போது, இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர்.

    டிரைவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் குடும்பத்தை பிரிந்து விட்டார். இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு டிரைவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவர்கள் 2 மாதங்களாக ஆரணியில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் டிரைவரின் நண்பரான இலுப்பகுணத்தை சேர்ந்த டிரைவர் கோகுல்ராஜ் (22) பெங்களூரில் காதலித்து வந்த பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துள்ளார். இதனால் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என்பதற்காக டிரைவரிடம் வீடு ஒன்றை வாடகைக்கு தரும்படி கேட்டுள்ளார்.

    டிரைவர் தான் வசித்து வரும் வீட்டின் அருகில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். அங்கு கோகுல்ராஜ் காதல் மனைவியுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.

    இந்நிலையில், டிரைவர் நேற்று முன்தினம் இரவு வேலை நிமித்தமாக செஞ்சிவரை சென்றுள்ளார். அப்போது இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.இதனை அறிந்த கோகுல் ராஜ், அவருடைய நண்பரான டிரைவர் ஜெயசூர்யா (22) என்பவரை போனில் தொடர்பு கொண்டு ஆரணிக்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, டிரைவர் வசிக்கும் வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டில் நண்பன் இல்லையா என கேட்டுள்ளனர். அதற்கு இளம்பெண் அவர் வெளியே சென்றுள்ளார் என்று கூறியபடி தனது கணவரின் நண்பர்கள் தான் என்பதால் அவர்களை வீட்டிற்குள் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, கோகுல் ராஜ், ஜெயசூர்யா இருவரும் திடீரென வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டனர்.

    வீட்டில் இருந்த குழந்தைகளை பக்கத்து அறையில் தள்ளி சத்தம் போடாமல் இருக்க வேண்டும், இல்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன குழந்தைகள் அமைதியாக இருந்தனர். உடனே இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை படுக்கை அறைக்கு தூக்கி சென்று கை கால்களைக் கட்டி இருவரும் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    மேலும் பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    பின்னர் கட்டுகளை அவிழ்த்து இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என இளம்பெண்ணை மிரட்டி விட்டு தப்பி ஓடினர்.

    இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து இளம்பெண் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து கோகுல்ராஜ், ஜெய்சூர்யா 2 பேரையும் கைது செய்தார்.

    இது தொடர்பாக கோகுல்ராஜிடம் விசாரணை நடத்தியதில் எனது காதல் மனைவியை இளம்பெண் அடிக்கடி திட்டி வந்தார். இதனால் அவளை பழிவாங்க நண்பனின் மனைவி என்று கூடபார்க்காமல் கற்பழித்ததாக கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேட்டவலம் அருகே 52 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    வேட்டவலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 60) விவசாயி இவர் மட்டப்பாறையில் அவருக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து 110 ஆடுகளை வளர்த்து வருகிறார். 

    இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். 

    காலை சென்று பார்த்தபோது அங்கு இங்கே உடல் சிதறிய நிலையில் ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம விலங்கு கடித்து அதில் மொத்தம் 52 ஆடுகள் இறந்து கிடந்தது 8 ஆடுகள் காயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வி ஏ ஓக்கள் ஜாய், ராஜீவ் காந்தி ஆர் ஐ அல்லி, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சம்பத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

    மேலும் தகவல் அறிந்து அவர் கால்நடை மருத்துவர் கவிதா நேரில் வந்து ஆடுகளை பார்வையிட்டு சம்பவ இடத்தில் இறந்த ஆடுகளின் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் இறந்த ஆடுகளை பள்ளம் தோண்டி புதைத்தனர். 

    மேலும் எந்த விலங்கு ஆடுகளை கடித்து கொன்றது என்பது குறித்து கால்நடை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அல்லியாளமங்கலம் கிராமத்தில் அபிதகுஜலாம்பாள் உடனுறை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் 200&ம் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் உள்ள அபிதகுஜலாம்பாள் உடனுறை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 24 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது.

    மாலையில் அபித குஜலாம்பாள் தாயாருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து பின்னர் அருணாச்சலேஸ்வரர் சிவலிங்கத்திற்கு பால் தயிர் சந்தனம் குங்குமம் இளநீர் கரும்புச்சாறு ஆகியவை மூலம் பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து லட்சார்ச்சனை செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுபின்னர்.

    அபிதகுஜலாம்பாள் உடனுறை அருணாச்சலேஸ்வரர் ஆகிய உற்சவ சாமிகளுக்கு வெட்டிவேர் மாலை அணிவித்து பல்வேறு வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்து மேளதாளம் முழங்க பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடியபடிமாடவீதி வழியாக கிராமத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சாமி வீதி உலா வந்தது.

    அப்போது பக்தர்கள் ஆர்வமுடன் வீட்டின் முன்பு கற்பூர தீபம் காண்பித்து வணங்கினார்கள் முன்னதாக சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் 24 மணி நேரம் இடைவிடாமல் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் சிவராத்திரி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுகிறது. 

    சிவராத்திரி தோன்ற காரணமாக இருந்தது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரி விழாவில் பங்கேற்க நேற்று திருவண்ணாமலை வந்தனர். சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரித்து சுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

    சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் இன்று (புதன்கிழமை) அதிகாலை வரை 4 கால பூஜைகள் நடைபெற்றது. முதல் கால பூஜையை பிரம்மாவும், 2&ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4&ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம்.

    பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. 

    சிவபூஜையில் பயன்படுத்தக் கூடாத மலராக கருதப்படும் தாழம்பூ இந்த பூஜையில் மட்டும் பயன்படுத்தப்படும்.அதன்படி நேற்றைய பூஜையிலும் தாழம்பூ வைத்து வழிபாடுகள் நடைபெற்றது பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் முக்கியமான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    கோவிலில் இரவு முழுவதும் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கோவில் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பு மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணா மலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் தவில் இசை சங்கத்தின் சார்பில் உலக அமைதிக்காக தலைவர் பிச்சாண்டி தலைமையில் சுமார் 100&க்கும் மேற்பட்ட நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை 24 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது. 

    அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள சக்கர குளத்தில் இரவில் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றினர். அது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

    சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

    சிவராத்திரி விழாவினால் பல மாதங்களாக கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருந்த பக்தர்கள் அதில் இருந்து விடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவராத்திரி விழாவிற் கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக் குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 4 நகர்ப்புற உள்ளாட்சிகளில் 273 கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகள் என 14 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 19&ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

    ஏற்கனவே போளூர் பேரூராட்சி 5-வது வார்டில், போட்டியின்றி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதால் 272 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    1,214 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை 22&ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

    இதில் திருவண்ணாமலை நகராட்சியில் (39 வார்டுகள்) 31 வார்டுகளில் தி.மு.க.வும், 6 வார்டுகளில் அ.தி.மு.க., 2 வார்டுகளில் சுயேட்சையும் வெற்றி பெற்றது. இதேபோல் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் (27 வார்டுகள்) 18 வார்டுகளில் தி.மு.க.வும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் பாமகவும், 3 வார்டுகளில் சுயேச்சைகளும் ஒரு வார்டில் காங்கிரசும் வென்றது.

    ஆரணி நகராட்சியில் (33 வார்டுகள்) 15 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 12 வார்டுகளில் தி.மு.க.வும், தலா 2 வார்டுகளில் காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க.வும், ஒரு வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெற்றி பெற்றன.

    வந்தவாசி நகராட்சியில் (24 வார்டுகள்) 10 வார்டுகளில் சுயேச்சைகளும், 8 வார்டுகளில் தி.மு.க.வும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும், ஒரு வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும், 2 வார்டுகளில் பாமகவும் வெற்றி பெற்றன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் (123வார்டுகள்) 69 வார்டுகளில் தி.மு.க.வும், 27 வார்டில் அ.தி.மு.க.வும், 16 வார்டுகளில் சுயேச்சைகளும், 4 வார்டுகளில் பா.ம.க.வும், 3 வார்டுகளில் காங்கிரசும், 2 வார்டுகளில் ம.தி.மு.க.வும், தல ஒருவார்டில்விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் வெற்றி பெற்றன.

    இதேபோல் 10 பேரூராட்சிகளில் (150 வார்டுகளில்), 85 வார்டுகளில் தி.மு.க.வும், 31 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 14 வார்டுகளில் சுயேச்சைகளும், தலா 6 வார்டுகளில் பா.ம.க. மற்றும் காங்கிரசும், 2 வார்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலா ஒரு வார்டுகளில்  பா.ஜ.க., மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், அ.ம.மு..க, தே.மு.தி.க. வென்றன.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள 273 வேட்பாளர்களும் இன்று பதவியேற்றனர். இதையொட்டி நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது. தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் வரும் 4-ந்தேதி நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலையில் சிவராத்திரியை முன்னிட்டு பெரிய நாயகி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    மகாசிவராத் திரியையொட்டி திருவண்ணாமலை 10-வது புது வாணியன் குளத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத பெரியாண்டவர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் இன்று இரவு நடைபெறுகிறது.

    முன்னதாக இன்று காலை கோவில் கருவறையில் உள்ள அம்மன் மீது சூரிய ஒளி பரவும் அதிசய நிகழ்வு நடந்தது. 

    இதனை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு மகிழ்ந்தனர். மேலும் இதையொட்டி நடைபெற்ற பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    பின்னர் காலை 10 மணிக்கு அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து இன்று 6 கால பூஜைகளும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    ரஷியா குண்டுமழை பொழிந்தததால் உக்ரைனில் பயத்தில் தவித்ததாக ஆரணி திரும்பிய மாணவி தெரிவித்தார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி தயாளன் பரமேஸ்வரி தம்பதியினருக்கு தீபாலட்சுமி வனிதா என்ற 2 மகள்கள் உள்னர்.

    இதில் தீபலட்சுமி உக்ரைன் உஸ்மாராத் பகுதியில் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். உக்ரைன், ரஷ்யா போரால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றனர். உணவு கிடைக்காமல் மாணவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

    தமிழக மாணவர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் ஏற்பாடு செய்து வருகிறது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மூலம் நேற்று நள்ளிரவு இண்டியன் ஏர்லைன் விமானம் மூலம் மாணவி தீபலட்சுமி சென்னை விமான நிலையம் வந்தார்.

    நாடு திரும்பிய மாணவர்களை வெளிநாடு வாழ்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு அளித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  பின்னர் மாணவி ஆரணி வந்தார். 

    அப்போது மாணவி தீபலட்சுமி கூறியதாவது:-

    ரஷ்யா உக்ரைனில் குண்டு மழை பொழிந்ததால் நாங்கள் மனதளவில் பயத்தில் தவித்தோம். வெளியுறவு அமைச்சகம் மூலம் தங்களை பத்திரமாக மீட்ட மத்திய அரசுக்கும் அதற்கு கோரிக்கை விடுத்த தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
    ×