என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருடுபோன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அடிக்கடி செல்போன் திருட்டுகள் நடைபறுவதாக போலீஸ் நிலையங்களில் செல்போன் பறிகொடுத்தவர்கள் புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். தொழில் நுட்ப உதவியுடன் விசாரணை தீவிரமாக மேற்கொண்டனர். புகார்களின் அடிப்படையில் 100 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரியவர் களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் தலைமை தாங்கி உரியவர்களிடம் செல் போன்கள் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்யாறு அருகே பம்புசெட்டில் ஒயரை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு:
செய்யாறு டவுன், சேரன் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 45), இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக விளைநிலம் செய்யாறு பகுதியில் உள்ளது. நேற்று காலையில் தண்ணீர் விடுவதற்கதாக சென்றார்.
அப்போது மின் மோட்டாரை இயக்க சென்றபோது பம்ப் செட்டில் இருந்து மோட்டாருக்கு செல்லும் 20 மீட்டர் காப்பர் ஒயரை யாரோ அறுத்து திருடிச் சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக நரசிம்மன் மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்&இன்ஸ்பெக்டர் பாரி அண்ண பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் செங்கட்டான் குண்டில் கிராமத்தை சேர்ந்த ஐடிஐ படித்துள்ள நிஷாந்த் வயது 19, என்ற வாலிபர் காப்பர் ஒயரை திருடியது தெரிய வந்தது.
போலீசார் நிஷாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே ஓடையில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீலா (வயது 70). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சுசீலா அருகே உள்ள ஓடை பகுதியில் விறகு வெட்ட செல்வதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறிவிட்டு சென்றார்.
வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பின்னர் ஓடை வழியாக சென்றவர்கள் சுசீலா தலையில் காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து சுசீலாவை யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது தவறிக் கீழே விழுந்து அடிபட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அருகே ஏரியை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கிராமத்திற்குட்பட்ட திம்மந்தாங்கள் ஏரி சுமார் 30ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரி பல ஆண்டு காலமாக நெசல் ஊராட்சிக்குட்பட்டு பஞ்சாயத்து வரைபடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நெசல் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு சுடுகாடு இந்த பகுதியில் உள்ளதால் சுடுகாடு பாதைகள் அடைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக ஆரணி கோட்டாச்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் சுமார் 100&க்கும் மேற்பட்டோர் ஆரணி விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடிரென சாலைமறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றதலைவர் திடீரென சாலையில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் டயர் அடியில் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக போலீசார் ஊராட்சி மன்ற தலைவரை சமரசம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் ஆரணி விழுப்புரம் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
தண்டராம்பட்டு காப்புக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ராதாபுரத்தில் அரசுக்கு சொந்தமான காப்பு காடுகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகளவில் உள்ளது.
இந்த வனப்பகுதிகளில் அதிகளவில் மான் முயல் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும் அதனை அவ்வழியாக சென்றவர்கள் புகைப்படம் எடுத்தும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தண்டராம்பட்டு வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அப்பகுதியில் கன்று ஒன்று சிறுத்தை தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டு தொடர்ந்து சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது மேலும் வனத்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தண்டராம்பட்டு அருகே பள்ளி ஆசிரியருக்கு நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அடுத்த கீழ் சிறுப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 21). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் நேற்று பிள்ளை தந்தாள் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக திருவண்ணாமலை கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
தண்டராம்பட்டு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் தமிழரசி , வட்டார சமூக நல அலுவலர் அம்சவல்லி , கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் ஆகியோர் கோவிலுக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் மைனர் பெண்ணின் பெற்றோரிடம் குழந்தை திருமணம் நடைபெ றுவது சட்டப்படி குற்றம் என்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக்கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் மைனர் பெண் மற்றும் அவருக்கு தாலி கட்ட இருந்த ஆசிரியர் சந்தோஷ் ஆகியோரை திருவண்ணாமலை தனியார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தானிப்பாடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே உள்ள ஆண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40 )கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ரேவதி (32)இவர்களுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் முதல் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்துவந்தனர்.
ராஜேந்திரனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். இதுபற்றி தனது உறவினர் வல்லரசு என்பவரிடம் ரேவதி தெரிவித்திருந்தார். இருவரும் சேர்ந்து ராஜேந்திரனை கொலை செய்யத் திட்டமிட்டனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு ரேவதி மது போதையில் இருந்த ராஜேந்திரன் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார் அவருக்கு வல்லரசு உதவி புரிந்துள்ளார்.
ராஜேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது ராஜேந்திரன் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தானிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது ராஜேந்திரன் தனது மனைவி ரேவதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததும். இதனால் ஆத்திரமடைந்த ரேவதி மற்றும் அவரது உறவினர் வல்லரசு ஆகிய இருவரும் சம்பவத்தன்று ராஜேந்திரனை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கொலை செய்ய முயன்ற ரேவதி மற்றும் வல்லரசு ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப் பட்டனர். இந்த சம்பவம் தண்டராம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.v
போளூரில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
போளூர்:
போளூர் அருகே உள்ள ராந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன் விவசாயி இவரது மனைவி லதா (வயது 43). இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் வாசுகி மட்டும் திருமணமாகிவிட்டது அருகில் செமிய மங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் லதாவுக்கும் வாசுதேவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த 1&ந் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு லதாவின் மகன் அப்பு குமார் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
தீக்காயம் மிக அதிகமாக இருக்க அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து இறந்த லதாவின் மூத்த மகள் வாசுகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் நீச்சல்குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கபபட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தை தற்போது பொதுமக்கள் பயன்படுத்திடவும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நீச்சல் குளத்தினை பயன்படுத்த வருபவர்கள் உரிய நீச்சல் உடையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நீச்சல் குளத்தினை பயன்படுத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கண்டிப்பாக முககவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
கைகள் அழுக்காக இல்லாத போதும் கைகளை சோப்பினை பயன்படுத்தி சுத்தம் செய்தல் வேண்டும். ஆல்கஹால் சானிடைசர்களை சாத்தியமான இடங்களில் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நீச்சல்குளத்தினை பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போளூர் பேரூராட்சியில் போட்டியின்றி தி.மு.க. வேட்பாளர் ராணி சண்முகம் தேரிவுசெய்யப்பட்டார்.
போளூர்:
உள்ளாட்சி தேர்தலில் திமுக 12 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும் சுயேட்சை ஓ£¤டத்திலும் வெற்றி பெற்றன.
பேரூராட்சி தலைவருக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் ராணி சண்முகம் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வந்தவாசி நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.
வந்தவாசி:
வந்தவாசியில் நகரமன்ற தலைவர் தேர்தலில் திமுக நகர பொறுப்பாளர்கள் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் முஸ்தபா அறிவித்தார்.
வந்தவாசி 24 வார்டுகள் உள்ளது. இதில் சுயேட்சை வேட்பாளர்கள்&10, திமுக 8 வார்டுகளிலும் அதிமுக 3 வார்டுகளிலும பாமக 2 வார்டுகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற நகரமன்ற தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஜலால் அதிமுகவை சேர்ந்த அம்பிகா மேகநாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மறைமுக தேர்தலில் அம்பிகா மேகநாதன் 6 ஓட்டுகளும், ஜலால் 18 வாக்குகளும் பெற்றனர். ஜலால் வெற்றி பெற்றதாக நகராட்சி ஆணையாளர் தேர்தல் அலுவலருமான முஸ்தபா அறிவித்தார்.
கட்சி பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆரணி நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் பதவி மறைமுக தேர்தல் இன்று நடந்தது.
இதில் அதிமுக சார்பில் 15 நகர மன்ற உறுப்பினர்களும் திமுக 12 உறுப்பினர்களும் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 5 பேர் சுயேட்சை உறுப்பினர் 1 மொத்தம் 33 நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்செல்வி தலைமையில் மறைமுக தேர்தல் நடந்தது.
இதில் தி.மு.க. 20, அ.தி.மு.க. 13 ஓட்டுகள் பெற்றது. தி.மு.க நகர செயலாளர் ஏ.சி.மணி வெற்றி பெற்றார் அ.தி.மு.க.வை சேர்ந்த பா£¤பாபு 13 வாக்கு பெற்று தோல்வியடைந்தார்.






