என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ரத்த குழாய் கண்டறிந்து உடலில் ஊசி மூலம் டியூப் பொருத்தினர்
    • 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு

    திருவண்ணாமலை :

    தண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஷேக்.இவரது மனைவி முனி.இவருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்தில் பிறந்த அந்த குழந்தை ஒரு கிலோ எடை மட்டுமே இருந்தது. வழக்கமாக 36- ல் இருந்து 40 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தை குறைந்தது 3 கிலோ எடை இருக்கும்.

    எடை குறைவாக பிறந்த குழந்தை ஆனால் இந்த குழந்தை 29 வாரத்தில் பிறந்ததால் உடற்பாகங்கள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் ஒரு கிலோ எடை மட்டுமே இருந்துள்ளது. இதனால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறைமாதத்தில் பிறந்த குழந்தை மிகவும் எடை குறைவாக இருப்பதால் அதற்குரிய நோய் எதிர்ப்பு சக்தி உடல் உறுப்புகள் வளர்ச்சி குறைந்து நோய்த்தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டது.

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்பு டாக்டர் பெருமாள் பிள்ளை மற்றும் மயக்கவியல் மருத்துவ இணை பேராசிரியர் சரவணகுமார், டாக்டர்கள் பாபு, சீனிவாசன், பிரகாஷ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து சிகிச்சை தொடங்கினர்.

    நவீன சிகிச்சை முதல் கட்டமாக குழந்தையின் இதயத்துக்கு செல்லும் பெரிய ரத்தக்குழாயில் டியூப் பொருத்தினால் தான் சிகிச்சையை தொடங்க முடியும் என்பதால் அதற்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் ரத்த க்குழாயை கண்டறிந்து குழந்தையின் உடலில் ஊசி மூலம் டியூப் பொருத்தும் பணி வெற்றிகரமாக செலுத்தி குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இத்தகைய குழந்தைக்கு அதிநவீன வசதி கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை மற்றும் அதி நவீன வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.

    இத்தகைய சிகிச்சையை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் மேற்கொண்டு சாதனை செய்துள்ளனர். தொடர்ந்து இந்த குழந்தை 24 மணி நேர மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளது. குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழுவினர் கூறுகையில்,

    பொதுவாக குறைந்த மாத எடை கொண்ட குழந்தைகளை குணமாக்குவது சவாலான செயல். நமது மருத்துவமனையில் குறைமாத குழந்தை பராமரிப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க டியூப் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தேசிய அளவில் இது போன்ற நிகழ்வு நடந்ததாக சான்று இல்லை. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை முதல் முறையாக வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை மருத்துவ கல்லூரி டீன் திருமாள் பாபு, கண்காணிப்பாளர் ஷகீல், உதவி கண்காணிப்பாளர் ஸ்ரீதர், குடியிருப்பு மருத்துவ அலுவலர் அரவிந்த் ஆகியோர் பாராட்டினர்.

    • தேர்வில் தேர்ச்சி பெறாததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் பிரசாந்த் (வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளிவந்தன. இதில் பிரசாந்த் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன வேதனையில் காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் உள்ள பேனில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். கண்ட அவரது உறவினர்கள் பிரசாந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 480 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்கள் எடுத்துள்ளனர்.
    • முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி களில் 2022 - ம் ஆண்டு பிளஸ் -2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது . மாணவி எஸ்.யுவபிரியா 594 மதிப்பெண்கள், பி.ரன்ஜினி 588 மதிப்பெண்கள், எ.ஹரிபிரியா 584 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில்முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

    மேலும் 590 மதிப்பெண்களுக்கு மேல் 1 மாணவரும் , 580 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், 500 மதிப்பெண் களுக்கு மேல் 58 மாணவர்களும் பெற்று சாதனை படைத் துள்ளனர். அதேபோல 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி எஸ். நித்யஸ்ரீ பாலா 488 மதிப்பெண்கள், ஜி.யுவ ஸ்ரீ 487 மதிப்பெண் கள், பி.புவனேஷ்வரி , டி.முகமது ஆசிக் ஆகியோர் 486 மதிப் பெண்கள் பெற்று பள்ளியில் முதல் 3 இடங்களை பெற்று. சாதனை படைத்துள்ளனர்.

    480 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்களும் , 470 மதிப் பெண்களுக்கு மேல் 17 மாணவர்களும், 450 மதிப்பெண்க ளுக்கு மேல் 27 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 70 மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் கணேஷ்குமார் ஆகியோரை பள்ளி செயலாளர் டாக்டர் வி.எம்.நேரு, தலைவர் டாக்டர் எஸ்.கணேசன், பொருளாளர் எ.மணி , இணைச் செயலாளர் எஸ்.இரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் டாக்டர் என்.மகாதேவன் மற்றும் அறக்கட்டளை இயக்குனர்கள் பாராட்டினார்கள்.

    • வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    • கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தபால் கோட்டத்தில் 2022-ம் ஆண்டின் முதலாவது பென்சன் அதாலத் என்னும் தபால் பென்சன் தாரர்கள் குறைகளையும் வகையில் நேர்காணல் கூட்டம் திருவண்ணாமலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் ஜூன் 28-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளன.

    எனவே தபால் பென்சன் தாரர்கள் தங்கள் குறைகளை தபால் கோட்ட கண்காணிப்பாளருக்கு வரும் 24ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தாள் அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • கொரோனாவால் 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டடிருந்தன.
    • ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

    கலசபாக்கம்:

    கலசப்பாக்கம் பகுதியில் உள்ள விண்ணுவாம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் மற்றும் என்னும் எழுத்தும் திட்டத்தில் கல்வி கற்பதில் மாணவர்களின் திறன்களை குறித்தும் மற்றும் மதிய உணவு வழங்குதல் ஆகியவை குறித்து கலசப்பாக்கம் தி.சரவணன் எம்.எல்.ஏ. திடீர் என்று சென்று மாணவர்களுடன் தரையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறுகையில் எனது தொகுதிக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டடிருந்தன இருப்பினும் தற்போது கொரோனா குறைந்து பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் அவர்களின் கற்றல் திறன் குறைந்திருக்கலாம் என கருதி எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    இதற்காக 1 முதல் 3 வகுப்பு வரை செல்லும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு இதன் மூலம் 1 வகுப்பு முதல் 3 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் அரும்பு மொட்டு மலர் என 3 வகையாக மாணவர்களின் கல்வித்தரத்தை பிரித்து அதற்கேற்றவாறு எண்ணும் எழுத்தும் திட்டத்தில் முழுமை பெற செய்வதே இந்த திட்டமாகும் இந்த திட்டம் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் எப்படி உள்ளது என்பதற்காகவே நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன் அப்போது இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் முதல் மாணவர்கள் வரை கற்றல் கற்பித்தல் திறனில் நல்ல முறையில் கற்பித்து வருகின்றனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார் தலைமை ஆசிரியர் அன்னபூரணி உதவி ஆசிரியர் சந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.

    • அக்னி வசந்த விழாவையொட்டி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது.

    கோவில் முன்பு களிமண்ணால் 33 அடி துரியோதனன் சிலை செய்து வைத்து பஞ்ச வர்ணம் பூசி நாடக நடிகர்கள் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடத்தி காண்பித்தனர்.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு துரியோதனன் படுகள நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.

    • வீடு புகுந்து மர்ம கும்பல் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். நெசவு தொழிலாளி. இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு தமிழரசு, அன்பரசு, என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    கஜேந்திரன் கடந்த 2 ஆண்டுகளாக குடும்ப வறுமை காரணமாக ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் கஜேந்திரன் வீட்டுக்கு 4 பேர் கும்பல் வந்து கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளனர்.

    தற்போது பணம் இல்லை என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் கஜேந்திரன் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கஜேந்திரன் மற்றும் சாமுண்டீஸ்வரி தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.

    • லாரி டயரில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்.
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    ஜமுனாமரத்தூர் தாலுகா மேல்அத்திப்பட்டு கிராமம் வெங்கடேசன் என்பவரது மகன் சக்திவேல் (வயது 21). இவர் நேற்று காலை பைக்கில் அவரது நண்பர் நெல்லிமரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (21) என்பவருடன் அத்திப்பட்டு கிராமத்தில் இருந்து ஜமுனாமரத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி அருகில் செல்லும் போது எதிரில் சென்று கொண்டிருந்த லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்க டயரில் பைக் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சக்திவேல் மற்றும் ஏழுமலை ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

    சக்திவேல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஏழுமலை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவலறிந்த ஜமுனாமரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    மேலும் காயம் அடைந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 136 பேர் பயனடைந்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு நகராட்சி அலுவலகத்தில் கிறிஸ்துவ தனியார் தொண்டு நிறுவனம் அமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் ரகுராமன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு எம்எல்ஏ ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 136 பேருக்கு பாய் மற்றும் போர்வைகளை வழங்கினார்.

    இறுதியில் தொண்டு அமைப்பின் நிர்வாகி தேவநேசன் நன்றி கூறினார்.

    • 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க உறுதி.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாமண்டூர் கிராமத்தில் அரசுஉயர் நிலைப்பள்ளியில் தற்போது சுமார் 250 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    மேலும் இந்த பள்ளி கட்டிட 100 ஆண்டுக்கும் மேலாக உள்ளதால் பாழடைந்து உள்ள கட்டிடத்திற்கு ஆரணி சட்டமன்ற உறுப்பினர்சேவூர் ராமசந்திரன் நிதியில் இருந்து சுமார் 18 லட்சம் நிதி ஒதுக்கி கடந்த மாதம் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

    புதிய பள்ளி கட்டிடம் பணி நடைபெற்று வந்த நிலையில் வருவாய்த்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்பள்ளி கட்டிட பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது சம்பந்தமாக வருவாய்த்துறை மற்றும் வட்டாரஅலுவலகத்தில்100ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கட்டிடடம் புதியதா கட்ட முயன்ற போது ததடுப்பது எதனால் என கேட்டதற்கு நீர்ப்பிடிப்புப் பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்தனர்.

    அப்பள்ளி கட்டிட பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை கண்டித்து ஆரணி, செய்யார் சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • கால்நடை பராமரிப்பு துறைக்கு தொடர்பு இல்லாதது.
    • 90 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையர் கடிதவழி தெரிவிக்கப்பட்டவாறு அனிமல் ஹண்ட்லர் மற்றும் அனிமல் ஹண்ட்லர் கம் டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு எனவும், சம்பளம் முறையே ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமனம் ஆணை வழங்கப்படும்.

    இதற்கு விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யுமாறும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5 பணியிடங்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் தலா 160 பணியிடங்கள் எனவும் வாட்ஸ் அப் மூலம் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த தகவல் அனைத்தும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பு இல்லாதவையாகும். தவறான தகவல் பகிரப்படுகின்றது.

    மேற்படி தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்த தகவலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • உறவினர் வீட்டு நிகழ்சியில் பங்கேற்க சென்றபோது பரிதாபம்.
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் வயது 62 இவர் கடந்த 7-ந் தேதி உறவினர் வீட்டு நிகழ்சியி பங்கேற்பதற்க்காக ஆக்கூர் கூட்டு ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றார்.

    அப்போது அவர் வெளியில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியக வந்த பைக் இவர் மீது மோதியது. சாமிநாதன் பலத்த காயம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேத்தனர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×