என் மலர்
நீங்கள் தேடியது "பணியாளர்களுக்கு போர்வை"
- ஓ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
- 136 பேர் பயனடைந்தனர்.
செய்யாறு:
செய்யாறு நகராட்சி அலுவலகத்தில் கிறிஸ்துவ தனியார் தொண்டு நிறுவனம் அமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் ரகுராமன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு எம்எல்ஏ ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 136 பேருக்கு பாய் மற்றும் போர்வைகளை வழங்கினார்.
இறுதியில் தொண்டு அமைப்பின் நிர்வாகி தேவநேசன் நன்றி கூறினார்.






