என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
பள்ளி கட்டிட பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல்
- 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
- போலீசார் நடவடிக்கை எடுக்க உறுதி.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாமண்டூர் கிராமத்தில் அரசுஉயர் நிலைப்பள்ளியில் தற்போது சுமார் 250 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மேலும் இந்த பள்ளி கட்டிட 100 ஆண்டுக்கும் மேலாக உள்ளதால் பாழடைந்து உள்ள கட்டிடத்திற்கு ஆரணி சட்டமன்ற உறுப்பினர்சேவூர் ராமசந்திரன் நிதியில் இருந்து சுமார் 18 லட்சம் நிதி ஒதுக்கி கடந்த மாதம் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.
புதிய பள்ளி கட்டிடம் பணி நடைபெற்று வந்த நிலையில் வருவாய்த்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்பள்ளி கட்டிட பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது சம்பந்தமாக வருவாய்த்துறை மற்றும் வட்டாரஅலுவலகத்தில்100ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கட்டிடடம் புதியதா கட்ட முயன்ற போது ததடுப்பது எதனால் என கேட்டதற்கு நீர்ப்பிடிப்புப் பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்தனர்.
அப்பள்ளி கட்டிட பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை கண்டித்து ஆரணி, செய்யார் சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






