என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
    • பொன்னேரி- மீஞ்சூர் சாலை அருகில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாமல் காணப்படுவதால் அதில் வாகனங்கள் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தெருக்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.

    இந்த நிலையில் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால் இந்த பள்ளங்கள் சரியாக மூடாமல் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது.

    இதற்கிடையே தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. மேலும் தெருக்கள் முழுவதும் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

    இதனால் தெருக்கள் முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகின்றன.

    ஆலாடு, ரெயில்வே சாலை, வெண்பாக்கம், என்.ஜி.ஓ. நகர், உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் முடிவடையாததால் அப்பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து நிற்பதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதே போல் பொன்னேரி- மீஞ்சூர் சாலை அருகில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாமல் காணப்படுவதால் அதில் வாகனங்கள் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட திலகர் தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் மழை நீர் வெளியேறாமல் தெருவில் தேங்கி காணப்படுகின்றன.

    மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஊராட்சிதலைவர் பாபு பேச்சு வார்த்தை நடத்தினார். மழைநீர் வெளியேற்ற குழாய் பதித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • கடத்தல் கும்பல் திருநின்றவூர் வழியாக செல்லும் போது செவ்வாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (24), அஜித் (23).இவர்கள் 2 பேரையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஆரோன், பிரதாப், பீட்டர், பாலாஜி, கருணாகரன் என்கிற மணி ஆகியோர் முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து மிரட்டி உள்ளனர்.

    இதனால் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சுரேஷ், அஜித், ஆகியோர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேஷ் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கியதாக தெரிகிறது.

    இதனை அறிந்த ராஜேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருவள்ளூர் அடுத்த அயத்துார் பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சுனில், அஜித் மற்றும் அவர்களது நண்பர் சுரேஷ் ஆகிய 3 பேரை கத்தியால் தாக்கி 2 கார்களில் கடத்தி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே கடத்தல் கும்பல் திருநின்றவூர் வழியாக செல்லும் போது செவ்வாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 காரையும் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த கார்கள் நிற்காமல் சென்றன. இதையடுத்து போலீசார் சுமார் 2 கி.மீட்டர் தூரம் வாகனத்தில் விரட்டிச்சென்று 2 கார்களையும் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில் கார்களில் இருந்த 5 பேர் கும்பல் சுனில், அஜித் மற்றும் அவர்களது நண்பர் சுரேஷ் ஆகிய 3 பேரையும் முன்விரோதத்தில் கடத்தி செல்வது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டனர். இந்த கடத்தல் தொடர்பாக நடுக்குத்தகை பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கருணாகரன் என்கிற மணி, அருண்பாபு என்கிற ஆரோன், புருேஷாத்தமன் என்கிற பீட்டர், ஜெயபிரதாப், தேவ் ஆனந்த்ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதில் தப்பி ஓடியவர் ராஜேஷ் என்பது தெரியவந்தது. அவரை செவ்வாப்பேட்டை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கார்கள், 3 பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    கடத்தலுக்கான காரணம் என்ன? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.

    திருவள்ளூர்:

    வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று இரவும் கனமழை கொட்டித் தீர்த்தது.

    இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பூண்டி, ஆர்.கே.பேட்டை, பொன்னேரி, ஆவடி, திருவாலங்காடு, பூந்தமல்லி, ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 7.2 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்து உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி-17

    பள்ளிப்பட்டு-14

    ஆர்.கே.பேட்டை-50

    சோழவரம்-8

    பொன்னேரி-35

    செங்குன்றம்-26

    ஜமீன்கொரட்டூர்-41

    பூந்தமல்லி-32

    திருவாலங்காடு-34

    திருத்தணி-21

    பூண்டி-58

    தாமரைப்பாக்கம்-62

    ஊத்துக்கோட்டை-25

    ஆவடி-42.

    • ரேசன் கடை உள்ளிட்ட 5 கடைகளில் இதேபோல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முன்மாதிரி நியாய விலை கடையாக செயல்பட்டு வருகிறது.
    • மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சங்களை கொண்டதாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெரியபாளையம்:

    தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள 75 ரேசன் கடைகளை தேர்ந்தெடுத்து முன்மாதிரி நியாய விலை கடையாக செயல்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

    இதையடுத்து அந்த ரேசன் கடைகளில் வண்ணம் பூசுதல், உட்புறம் மற்றும் வெளிப்புறங்களை தூய்மையாக பராமரித்தல், அறிவிப்பு பலகைகளை புதிதாக வைத்தல், வேலை நேரங்களில் விற்பனை எந்திரங்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்தல், மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சங்களை கொண்டதாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெரியபாளையம் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் இயங்கி வரும் ரேசன் கடை மற்றும் கடம்பத்தூரில் உள்ள ரேசன் கடை உள்ளிட்ட 5 கடைகளில் இதேபோல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முன்மாதிரி நியாய விலை கடையாக செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தாமரைப்பாக்கத்தில் உள்ள ரேசன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா? சரியான எடையுடன் அனைத்து பொருட்களும் வழங்குகிறார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான குறைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, திருவள்ளூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, துணைப் பதிவாளர்கள் கருணாகரன், காத்தவராயன், சார்பதிவாளர்கள் விஜயவேலன், விஜய்சரவணன், ஒன்றிய மேலாளர் ஆடல் அரசன், தாமரைப் பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாஸ்கரன், சிற்றெழுத்தர் பரிமளம், விற்பனையாளர் ஆறுமுகம் உடன் இருந்தனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு
    • திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த தாமனேரி கிராமம், ரங்காபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த இரண்டாம் தேதி காணாமல் போன தனது ஆட்டுக்குட்டியை தேடி தாமனேரி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆதிவராதபுரம் காலனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பஞ்சாட்சரம் கத்தியை காட்டி மிரட்டி அந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சாட்சரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சின்னம்மாபேட்டை ஊராட்சியில் தக்கோலம் அருகே வசிப்பவர் விஜயகுமார்.
    • வீட்டின் மாடியில் துங்கிகொண்டு இருந்தபோது தரைத்தளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.5 ஆயிரம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகளை திருடி சென்றனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் தக்கோலம் அருகே வசிப்பவர் விஜயகுமார் (வயது 55). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

    நேற்றுமுன்தினம் இரவு அவரது வீட்டின் மாடியில் துங்கிகொண்டு இருந்தபோது தரைத்தளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.5 ஆயிரம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகளை திருடி சென்றனர்.

    இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • ஒரு கிலோ மீட்டர் தூர சாலைக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் தலா மூன்று அடி சாலையை அகலப்படுத்த நிலம் தேவைப்பட்டது.
    • சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த சில தினங்களாக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    நெய்வேலி ஏரிக்கரையில் இருந்து திருக்கண்டலம் ஊராட்சி மேட்டுதெரு வரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை 12 அடி அகலத்தில் இருந்து வந்தது. இதனால் சாலையில் ஒரு வாகனம் செல்லும் போது எதிர் திசையில் மற்றொரு வாகனம் செல்ல இயலாத நிலை நீடித்து வந்தது.

    மேலும், இச்சாலை அகலம் குறைவாக இருந்ததால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டது. எனவே, இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என திருக்கண்டலம் ஊராட்சி பொதுமக்கள் சுமார் 40 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

    இது குறித்து கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் பார்வைக்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது.

    இந்நிலையில் ஒரு கிலோ மீட்டர் தூர சாலைக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் தலா மூன்று அடி சாலையை அகலப்படுத்த நிலம் தேவைப்பட்டது.அந்த நிலத்தின் உரிமையாளர்களும், விவசாயிகளுமான ராமச்சந்திரன், ராஜேந்திரன், சண்முகம், வஜ்ரம், ராஜா ஆகியோரிடம் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    சாலையை அகலப்படுத்துவதால் இந்த ஊராட்சியில் வசித்து வரும் சுமார் 4,000 பொதுமக்கள் பயன் பெறுவார்கள் என்று எடுத்துக் கூறினார். இதனை ஏற்று சாலையை அகலப்படுத்த தேவையான நிலத்தை வழங்குவதாக மேற்கண்ட 5 விவசாயிகளும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒப்புதல் அளித்தனர்.

    எனவே, இந்த சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த சில தினங்களாக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிலையில், பொது மக்களின் நலன் கருதி தலா மூன்று அடி வீதம் விவசாய நிலத்தை வழங்கிய விவசாயிகளுக்கு எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் சார்பில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்திய வேலு, ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் ஆகியோர் விவசாயிகளின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்று சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் லிங்கதுரை, ஊராட்சி செயலர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    • ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நுழையும்போது வீடியோ எடுக்கச்சொல்லி மீண்டும் நடைமேடையில் பட்டாக்கத்தியை உரசியபடி அட்டகாசம் செய்தனர்.
    • மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.

    அவர்கள் தினந்தோறும் மின்சார ரெயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.

    இவர்களால் ரூட்டு தல தகராறில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதேபோல் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சிலர் பட்டாக்கத்திகளை மின்சார ரெயில்களில் தொங்கியபடி நடைமேடையில் உரசியபடி செல்லும் சம்பவமும் அடிக்கடி அரங்கேறுகிறது.

    போலீசார் மாணவர்களுக்கு பல்வேறு எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்தும் இது குறையவில்லை.

    இதற்கிடையே மீஞ்சூர் அருகே மின்சார ரெயிலில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் பட்டாக்கத்திகளை நடைமேடையில் உரசியபடி செல்வது தற்போது மீண்டும் நடந்து உள்ளது.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரெயிலில் செல்லும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டில் கும்பலாக நின்றபடி உள்ளனர்.

    அவர்கள் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரெயில் நிலையங்களின் நடைமேடையில் மின்சார ரெயில் வந்ததும் மாணவர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசி செல்கின்றனர். இதனை கண்டு ரெயில் இருந்த பயணிகளும், நடைமேடையில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அடுத்தடுத்த ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நுழையும்போது வீடியோ எடுக்கச்சொல்லி மீண்டும் நடைமேடையில் பட்டாக்கத்தியை உரசியபடி அவர்கள் அட்டகாசம் செய்து சென்றனர். இதனை மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளார்.

    இதுகுறித்து மின்சார ரெயில் பயணிகள் கூறும்போது, மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    போலீசார் எச்சரித்தும் மாணவர்கள் கண்டு கொள்ளாமல் இதுபோல் நடந்து கொள்கிறார்கள். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மாணவர்கள் கத்தியுடன் மோதும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் ரகளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

    • பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
    • வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் நேரிடையாக வழங்கப்பட்டு வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    தற்போது பல்வேறு இடங்களில் தொற்று நோய், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன.

    இதனை தடுக்கும் பொருட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் ஏற்பாட்டில் அப்பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் நேரிடையாக வழங்கப்பட்டு வருகிறது.

    பஜனை கோவில் தெரு அரசூர் சாலை, வேணு கோபால் தெரு ஆற்றங்கரை ரோடு, உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் உள்ள வீடுகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    • சென்னையில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டுகிறது.
    • அச்சரப்பாக்கம், மதுராந்தகம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

    திருவள்ளூர்:

    தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டுகிறது. இதே போல் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் விட்டு விட்டு நீடித்தது.

    எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், போரூர் பெரம்பூர், வியாசர்பாடி, திருவொற்றியூர், திருவான்மியூர், ராயபுரம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர், கொளத்தூர், கொடுங்கையூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    இன்று காலையில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. பின்னர் மழை இல்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதே போல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்டத்திலும் மழை நீடித்தது. தாம்பரம், பள்ளிக்கரணை, வண்டலூர், ஆலந்தூர், கூடுவாஞ்சேரி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    அச்சரப்பாக்கம், மதுராந்தகம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.கே. பேட்டையில் 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    பள்ளிப்பட்டு - 10

    சோழவரம் - 16

    பொன்னேரி - 27

    செங்குன்றம் - 32

    ஜமீன்கொரட்டூர் - 5

    பூந்தமல்லி - 4

    திருவாலங்காடு - 35

    திருத்தணி -52

    தாமரைப்பாக்கம்-3

    திருவள்ளூர்-9

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் 2661 மி. கனஅடி தண்ணீர் உள்ளது. 196 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • லாரி டிரைவரான நாமக்கல்லைச் சேர்ந்த பிரபாகரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
    • மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். இவர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வேலை முடித்து விட்டு மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அன்பரசனை கத்தியால் வெட்டி செல்போன் பறித்து சென்றனர்.

    இதே போல் அதே கும்பல் மீஞ்சூர் வண்டலூர் சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த லாரி டிரைவரான நாமக்கல்லைச் சேர்ந்த பிரபாகரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து உடனடியாக மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு விரைந்து வந்ததும் கொள்ளையர்கள் மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு வயல் வெளிகளில் தப்பி ஓடினர்.

    அவர்களில் மீஞ்சூர் காலனி பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்கிற ஆகாஷ் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்த பிரதாப்பிடமிருந்து செல்போன், ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் விட்டு, விட்டு நீடித்தது.

    திருவள்ளூர்:

    தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கடந்த 3 நாட்களாக விட்டு, விட்டு பலத்த மழை கொட்டுகிறது. இதே போல் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையல் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் விட்டு, விட்டு நீடித்தது.

    எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், போரூர் பெரம்பூர், வியாசர்பாடி, திருவொற்றியூர், திருவான்மியூர், ராயபுரம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர், கொளத்தூர், கொடுங்கையூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    இன்று காலையில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. பின்னர் மழை இல்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இதே போல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்டத்திலும் மழை நீடித்தது. தாம்பரம், பள்ளிக்கரணை, வண்டலூர், ஆலந்தூர், கூடுவாஞ்சேரி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    அச்சரப்பாக்ம், மதுராந்தகம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.கே. பேட்டையில் 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    பள்ளிப்பட்டு - 10

    சோழவரம் - 16

    பொன்னேரி - 27

    செங்குன்றம் - 32

    ஜமீன்கொரட்டூர் - 5

    பூந்தமல்லி - 4

    திருவாலங்காடு - 35

    திருத்தணி -52

    தாமரைப்பாக்கம்-3

    திருவள்ளூர்-9

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    ×