என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ளவ"

    • சென்னையில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டுகிறது.
    • அச்சரப்பாக்கம், மதுராந்தகம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

    திருவள்ளூர்:

    தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டுகிறது. இதே போல் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் விட்டு விட்டு நீடித்தது.

    எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், போரூர் பெரம்பூர், வியாசர்பாடி, திருவொற்றியூர், திருவான்மியூர், ராயபுரம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர், கொளத்தூர், கொடுங்கையூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    இன்று காலையில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. பின்னர் மழை இல்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதே போல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்டத்திலும் மழை நீடித்தது. தாம்பரம், பள்ளிக்கரணை, வண்டலூர், ஆலந்தூர், கூடுவாஞ்சேரி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    அச்சரப்பாக்கம், மதுராந்தகம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.கே. பேட்டையில் 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    பள்ளிப்பட்டு - 10

    சோழவரம் - 16

    பொன்னேரி - 27

    செங்குன்றம் - 32

    ஜமீன்கொரட்டூர் - 5

    பூந்தமல்லி - 4

    திருவாலங்காடு - 35

    திருத்தணி -52

    தாமரைப்பாக்கம்-3

    திருவள்ளூர்-9

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் 2661 மி. கனஅடி தண்ணீர் உள்ளது. 196 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ×