என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் 7 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது
- திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.
திருவள்ளூர்:
வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று இரவும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பூண்டி, ஆர்.கே.பேட்டை, பொன்னேரி, ஆவடி, திருவாலங்காடு, பூந்தமல்லி, ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 7.2 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்து உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி-17
பள்ளிப்பட்டு-14
ஆர்.கே.பேட்டை-50
சோழவரம்-8
பொன்னேரி-35
செங்குன்றம்-26
ஜமீன்கொரட்டூர்-41
பூந்தமல்லி-32
திருவாலங்காடு-34
திருத்தணி-21
பூண்டி-58
தாமரைப்பாக்கம்-62
ஊத்துக்கோட்டை-25
ஆவடி-42.






